mumbai-rain

அடுக்குமாடிக் கட்டிடத்திலிருந்து குற்றால அருவி போல் கொட்டும் நீர்.. என்ன காரணம் தெரியுமா? வீடியோ

கடந்த சில நாட்களாக மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை கோர தாண்டவம் ஆடுகிறது. மும்பையில் பருவமழை பொய்த்து வருவதால் நகரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் முடங்கிக் கிடைக்கிறது. நாளுக்கு நாள் மழையின் அளவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் நிவாரணப் பணிகளும் மேற்கொள்ள முடியாத நிலையில் கவலைக்கிடமாக உள்ளது. சாலைகளிலும்,ரயில் தண்டவாளங்களிலும் மழைநீர் வெள்ளம்போல் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இதனால் எவ்வித பணியும் சீரான முறையில் நடைபெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன, மழையும் ஓய்ந்தபாடில்லை. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

இந்நிலையில் மும்பையில் ஒரு ஹோட்டலில் மேற்கூரையில் இருந்து தண்ணீர் அருவி போல் கொட்டுவது காண்போரை பிரமிக்க வைக்கிறது. இது செயற்கை அருவி கிடையாது, மழைநீரை மாடிமேல் தங்க விடாமல் கீழே அனுப்புவதற்காக ஏற்படுத்தப்பட்ட வழிதான் இந்த அருவி போன்றது. இது உண்மையிலேயே காண்போர் நெஞ்சை கொள்ளை கொள்ளும்.