fbpx
Connect with us

தனி ஒருவன் 2வில் நடிக்கப்போவாது யார் யார் தெரியுமா? தம்பி உடையான் படைக்கு அஞ்சான்

thani-oruvan-2

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema Kisu Kisu

தனி ஒருவன் 2வில் நடிக்கப்போவாது யார் யார் தெரியுமா? தம்பி உடையான் படைக்கு அஞ்சான்

இயக்குனர் மோகன் ராஜாவின் பெஸ்ட் படம் என்றால் தனி ஒருவன் தான் என்று ஒரு நொடியும் யோசிக்காமல் சொல்ல முடியும் .

இந்த படத்தில் ஜெயம் ரவி தன் நடிப்பால் அசத்தியிருப்பார், ஸ்டைலிஷ் வில்லனாக அரவிந்த் சாமி , துடிப்பான ரோலில் நயன்தாரா என அக்மராக் கமெர்ஷியல் மற்றும் மெஸேஜ் இரண்டும் கலந்த படம்.

சில மாதங்களுக்கு முன்பே தனி ஒருவன் இரண்டாம் பாகம் ஸ்க்ரிப்ட் ரெடி செய்து வருவதாக மோகன் ராஜா தகவலை பகிர்ந்தார். முதல் பாகத்தை விட பல மடங்கு திரில்லராக இந்த பார்ட் உருவாகுமாம்.

நாம் எதிர்பார்க்காத பல சர்ப்ரைஸ்களும் இந்த திரைப்படத்தில் இருக்கும் இருக்கும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் 2021 பிப்ரவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வில்லன் வேடத்தில் அரவிந்த் சாமி கிடையாது. ( பாலிவுட் உச்ச நட்சத்திரம் நடிக்க கூடுமாம்) மற்றபடி முதல் பார்ட்டில் உள்ள பலரும் இதிலும் உண்டாம்.

நயன்தாராவே ஹீரோயின். ஜெயம் ரவியின் நண்பர்கள் ரோலில் உள்ள ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் போன்றவர்களின் கதாபாத்திரங்கள் மேலும் மெருகேற்றப்பட்டு தரமாக இருக்கும் என்கின்றனர்.

Continue Reading
To Top