Tamil Nadu | தமிழ் நாடு
தமிழகத்தில் தலைவிரித்தாடும் சாதிவெறி.. எத்தனை அசுரன் வந்தாலும் திருத்த முடியாது
அசுரன் போன்ற ஆயிரம் படங்கள் சாதி மதம் என்பது எதுவும் இல்லை என்ற கருத்துடன் வந்தாலும் சாதி வெறி என்பது தமிழக மக்கள் மனதில் ஏன் ரத்தத்தில் ஊறிப்போன உறவு என்று கூட சொல்லலாம். அது சிறு குழந்தைகளிடமும் வெளிப்படையாக தெரிவது தான் வேதனை மிக்க செயல்.
அது போன்ற செயல்தான் தற்போது மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு என்ற பகுதியில் நடந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன இந்த பாலமேட்டில் ஜாதி திமிரை காட்டி ஒரு சிறுவன் சக மாணவனிடம் அவனது சாதியை சொல்லி காட்டி பிளேடால் அவனது முதுகை கிழித்த இந்த செயல் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன் தன்னுடன் படிக்கும் சக மாணவனின் புத்தக பையை எடுத்து ஒளித்து வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் புத்தக பையின் உரிமையாளரான அந்த மாணவன், ஒளித்து வைத்து விளையாடிய அந்த மாணவனிடம்பை எங்கே? என கொஞ்சம் சத்தமாக கேட்க, ஒளித்து வைத்த மாணவன், சக மாணவனின் ஜாதிப் பெயரைச் சொல்லி அசிங்கமாக திட்டி மேலும் தன் கையில் வைத்திருந்த பிளேடால் முதுகை கிழித்து விட்டான்.
அந்த மாணவன் மீது வன்கொடுமை சட்டம் போடப்பட்டது. மேலும் அடிபட்ட அந்த மாணவனை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
