Connect with us
Cinemapettai

Cinemapettai

aishwarya-rai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாகும் பிரபல இயக்குனர்! அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

அமரர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்றூப் புதினமே பொன்னியின் செல்வன். கி.பி.1000 ஆம் ஆண்டு இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இதனை இரண்டு பார்ட் கொண்ட படமாக மணிரத்தினம் உருவாக்கி வருகிறார்.

படத்திற்கு இசை ரஹ்மான், ஒளிப்பதிவு ரவிவர்மன், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். வசனம் ஜெயமோகன், ப்ரொடக்ஷன் டிசைன் தோட்டா தரணி. சண்டைக்க காட்சிங்கள் ஷாம் கௌஷல், நடனம் பிருந்தா, உடை வடிமைப்பு ஏகா லக்கானி. திரைக்கதையை மணிரத்தினதுடன் இணைந்து குமரவேல் ரெடி செய்துள்ளனர். தாய்லாந்தில்  முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பு கொரோனாஅச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் ரோலில் பிரபு மற்றும் சரத்குமார் நடிப்பதாக இருந்தது. எனினும் சரத்குமாரை வேற ரோலுக்கு மாற்றிவிட்டாராம் மணி. எனவே சின்ன பழுவேட்டரையராக நிழல்கள் ரவி நடிக்கவுள்ளார்.

நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராயை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளும் பெரிய பழுவேட்டரையர் எனும் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பிரபு விலகிவிட்டார். எனவே அந்த ரோலில் இயக்குனர் மற்றும் நடிகர் (அசுரன், வானம் கொட்டட்டும்) பாலாஜி சக்திவேல் நடிக்கவுள்ளாராம்.

balaji sakthivel ponnyin selvan

இந்த கதாபாத்திரத்துக்காக பாலாஜி சக்திவேல் நீண்ட தாடி வளர்த்து வருகிறாராம் . இப்படத்தில் இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Continue Reading
To Top