மலையாள சினிமாவில் சில நாட்களாக சர்ச்சைகள் இருந்து வருகிறது. சமீபத்தில் தான் பாவனா கடத்தப்பட்ட வழக்கில் திலீப் கைதானார். அதனை தொடர்ந்து நடிகை மைதிலி தயாரிப்பாளர் கிரண் மீது புகார் அளித்திருந்தார்.

தற்போது பிரபல நடிகரான லாலின் மகன் ஜீன் பால் மீது புகார் எழுந்துள்ளது. துணை நடிகை ஒருவர் ஜீன் பால் இயக்கிய ஹனி பீ படத்தின் 2 ம் பாகத்தில் நடித்துள்ளார்.

அவருக்கு தரவேண்டிய சம்பளத்தை ஜீன் கொடுக்கவில்லையாம். பல முறை முயற்சித்த பிறகு தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் வந்து வாங்கிக்கொள்ளும் படி ஜீன் கூறியுள்ளார்.

இதனால் அந்த துணை நடிகை அங்கு சென்று பார்த்த போது ஜீன் பாலுடன், நடிகர் ஸ்ரீ நாத், டெக்னீசியன் அனூப், அனிருத் ஆகியோர் ஒரே அறையில் இருந்துள்ளனர்.

சம்பள பாக்கி வேண்டுமானால் எங்களுடன் தங்க வேண்டும் என ஜீன் கூறியுள்ளார். விசயத்தை புரிந்துகொண்டு அங்கிருந்து வெளியேறி காவல்துறையில் அந்த 4 பேர் மீது துணை நடிகை புகார் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோவில் இயக்குனர் ஜீன் பால், நடிகர் ஸ்ரீ நாத்