நடிகர் சித்தார்த் மீது மீண்டும் ஒரு வழக்கு.. எவ்வளவு அடிச்சாலும் மனுஷன் அசரல!

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக பாய்ஸ் படத்தில் ஒரு நாயகனாக தோன்றியவர் தான் நடிகர் சித்தார்த். அதன் பின் பல வெற்றிப்படங்களை தந்து நல்ல நடிகர் என்று தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிப் படங்களில் நடித்து பரவலாக பேசப்பட கூடிய நடிகர் சித்தார்த் மாறினார். அரசியல் சம்பந்தபட்ட கருத்துகளை, குறிப்பாக பாஜகவிற்கு எதிரான சர்ச்சையான கருத்துக்களை அவ்வபோது சொல்லக்கூடியவர்.

இதனால் இவருக்கு பலமுறை கொலை மிரட்டல் கூட வந்ததாக சொல்லப்பட்டது. அப்படி இருந்தும் தைரியமாக கருத்துக்களை வெளியிடும் சித்தார்த், சில நாட்களுக்கு முன்பு இந்திய பிரதமர் மோடி பஞ்சாப் சென்று இருந்தபோது, அவரது பயணத்தில் மிக பெரிய பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டது என்று, இந்திய அளவில் மிக பெரிய சர்ச்சையானது. இது குறித்து பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நோவால், சமூக வலைதளத்தில் ஒரு கருத்து பதிவிட்டார்.

அதில், ‘நாட்டின் பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது என கூறியிருந்தார். அதில் கடுப்பான சித்தார்த் எதிர் கருத்தினை பதிவு செய்து இருந்தார்.அதில் சாய்னாவை மிக கேவலமான வார்த்தைகளால் வசை பாடி இருந்தார்.

இதனால், சித்தார்த் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தேசிய பெண்கள் ஆணையம், கொதித்து எழுந்தது. மேலும்,டி.ஜி.பி., சைலேந்திரபாபுவுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியது அந்த ஆணையம். அதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

சைபர் கிரைம் போலீசார், இதுகுறித்து விசாரணையை தொடங்கியது. இருவருவரின் பதிவுகளையும் ஆய்வு செய்து, விசாரணைக்கு சித்தார்த் ஆஜராக வேண்டும் என, சம்மன் அனுப்பி இருக்கின்றனர். நேரில் அவர் வர முடியாத காரணத்தால் வீடியோ கான்பரன்ஸ் வழியாக விசாரணை நடத்தவும் முடிவு செய்தனர்.

அதன்படி, காவல்துறையினர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக சித்தார்த்திடம் விசாரித்து வாக்குமூலத்தை வாங்கி கொண்டனர். அப்போது, ‘இழிவுப்படுத்தும் நோக்கத்தில் கருத்து பதிவு செய்யவில்லை. அதற்காக, என் வார்த்தைகளை நான் நியாயப்படுத்தவில்லை. இதுபற்றி சாய்னா நோவாலிடம் மன்னிப்பு கோரி அறிக்கை கூட நான் வெளியிட்டேன். சாய்னாவும் அதை ஏற்றுக் கொண்டார் என சித்தார்த் கூறி இருக்கிறார் .

இவரது வாக்குமூலத்தை, தேசிய பெண்கள் ஆணையத்திற்கு அனுப்ப இருக்கின்றனர் காவல் துறையினர். இந்த சம்பவம் தொடர்பாக, சித்தார்த் மீது, தெலுங்கானா மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. என்னதான் வழக்கு பதிவு செய்தாலும், மிரட்டினாலும் சித்தார்த் பயப்படுவதாக இல்லை. சித்தார்த்தின் சேவை இந்த நாட்டிற்கு தேவை என்றும் அவருக்கு ஆதரவு குரலும் இருக்கத்தான் செய்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்