Raghava Lawrence

லாரன்ஸ் சமீப காலமால கொஞ்சம் சர்ச்சைகளில் சிக்கும் பெயராகவே உள்ளது. ஜல்லிக்கட்டில் கடைசி நாள் வரை இளைஞர்களுடன் இருந்து, இறுதி நாள் நடந்தது எல்லாம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் இவர் தன் அறக்கட்டளையின் மூலம் பல உதவிகளை செய்து வருகின்றார், பல குழந்தைகளின் படிப்பு செலவை இவர் ஏற்று கட்டியுள்ளார்.

ஆனால், ஒரு சில யு-டியூப் சேனல்கள் இவரை பற்றி அவதூறு தகவல்கள் பரப்பி வருவதாக லாரன்ஸ் நற்பனி மன்றத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.

அவர்கள் மீது உடனே சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.