நடிகை ஓவியா கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது ஓவியா ஆர்மி மட்டுமல்ல உலகிற்கே தெரிந்த விஷயம். ஆரவ் மீது கொண்ட காதல் தோல்வியால் ஓவியா மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார்.

அவர் விலகுவதற்கு முதல் நாள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், திநகர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இவற்றை பற்றிய உண்மையான தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் ஓவியா பிக் பாசிலிருந்து வெளியேறி சில நாட்கள் சென்னையில் இருந்தார். இப்போது வெளிநாடு சென்றுவிட்டார்.

அதிகம் படித்தவை:  ஜூலி அதிரடி பேச்சு,biggboss என் உண்மை முகத்தை வெளிக்காட்டவில்லை.!!

இந்நிலையில் ஓவியாவின் தற்கொலை முயற்சி குறித்தும், தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மன இறுக்கத்தை தோற்றுவிக்கிறது என்றும் வழக்கறிஞர் S.S.பாலாஜி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

oviyaஇதுகுறித்து வழக்கு பதிவு செய்ய ஓவியாவிடம் அவரது தற்கொலை முயற்சி பற்றி விசாரணை நடத்த ஓவியாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

அதிகம் படித்தவை:  சர்ச்சையில் சிக்கிய ஓவியா... அதிர்ச்சியில் ஓவியா ஆர்மி

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: ரெண்டு நாள் முன்னாடி அரசியல்வாதிகள் தொல்லையால் ஒரு கலெக்டர் தற்கொலை செஞ்சு செத்துப்போய்டாரு, அது பற்றி யாராவது புகார் கொடுத்துருகிங்களா? சும்மா தெரிஞ்சுக்கலாம்னு கேட்டோம் அவ்வளவுதான்.