வெகு நாட்களுக்கு பிறகு நடிகர் மாதவன் தற்போதுதான் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘இறுதி சுற்று’ படம் சூப்பர் ஹிட்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவருக்கு எதிராக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் அவருக்கு சொந்தமான நிலம் வழியாக செல்லும் வாய்க்கால் பகுதியை ஆக்கிரமிப்பு செய்ததாக திண்டுக்கல் பழநியை சேர்ந்த என்.கணேசன் என்பவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார்.

இதை தட்டிகேட்ட அவருக்கு மாதவனின் ஆட்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதற்கு பதிலளிக்க மாதவன், திண்டுக்கல் ஆட்சியர், பழநி வட்டாட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.