SundarC-Aranmanai2-1000Screens-Theatreபடத்தை தடைவிதிக்க இதுநாள் வரை சினிமாவிற்கு சம்மந்தம் இல்லாதவர்கள் தான் வழக்கு போட்டனர். தற்போது அரண்மனை-2விற்கு சினிமாவை சார்ந்த ஒருவரே இப்படம் வரக்கூடாது என வழக்கு தொடுத்துள்ளார்.

தயாரிப்பாளர் முத்துராமன் ஏற்கனவே அரண்மனை முதல் பாகம் வருகையில் இது என்னுடைய ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் அப்பட்டமான காப்பி என்று வழக்கு கொடுத்தார். ஆனால், அந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் தான் இருந்தது.

அதிகம் படித்தவை:  இணையத்தில் வைரலாக பரவும் சூர்யா 36, விஜய் 62 போட்டோ !

தற்போது மீண்டும் இரண்டாம் பாகத்தை வெளியிடக்கூடாது என சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ‘இதுதொடர்பாக மனுதாரரும், எதிர் மனுதாரரும் சமரச தீர்வு மையத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வரும் 28-ம் தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு, விசாரணையை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.