பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக சூர்யா, சத்யராஜ் உட்பட 8 நடிகர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்ட் சில மாதங்கள் முன்பு பிறப்பிக்கப்பட்டது.

சினிமா துறை மற்றும் விபச்சாரம் தொடர்பாக ஒரு பிரபல நாளிதழ் வெளியிட்ட செய்தியை எதிர்த்து நடிகர்கள் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களை கேவலப்படுத்தும் விதமாக பேசினர்.

கைது வாரண்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 8 நடிகர்களும் மனு செய்தனர். அதை விசாரித்த நீதிமன்றம் நடிகர்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவால் தற்போது நடிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.