மீண்டும் ஒளிபரப்பாகிறது கார்ட்டூன் நெட்வொர்க் நிகழ்ச்சிகள்! இனி மற்ற சேனல்களின் கதி?

1991ல் TNT குழுமத்தால் 320 மில்லியன் டாலர் விலை கொடுத்து ஹன்னா பார்பரா புரோடக்சன் வாங்கப்பட்டது. அதன்பின் 1992ல் அக்டோபர் 1ம் தேதியிலிருந்து நம் மனதை திருடிச் செல்ல வந்ததுதான் கார்ட்டூன் நெட்வொர்க்.

இதில் ஒளிபரப்பப்பட்ட டாம் அண்டு ஜெர்ரி, பாப்பாய், ஸ்வாட் கேட்ஸ், லூனி டூன்ஸ், ஹீ மேன், ஸ்கூபி டூ வேர் ஆர் யூ, ஆடோம் ஆன்ட், பவர் பாப் கேள்ஸ், ஆடம்ஸ் பாமிலி, காப்டன் அமேரிக்கா, காப்டன் எக்ஸ்ட்ரீம், ஜானி பிராவோ, டெக்ஸ்டர்ஸ் லேப்பரேட்டரி, கரேஜ் தி கவர்ட்லி டாக் போன்ற பல ப்ரோக்ராம்கள் இன்றளவும் யாராலும் மறக்க இயலாதவை.

ஜூன் 14, 2004ம் ஆண்டு இதன் லோகோ மற்றும் நிர்வாகம் மாற்றம் அடைந்தது. அப்போது முதல் அதில் ஒளிபரப்பப்பட்ட பல ப்ரோக்ராம்கள் தோல்வியை தழுவின. இருந்தாலும் அதன் பின் பென் டென், லார்வா போன்ற சில ப்ரோக்ராம்கள் மட்டும் பேசப்படும்படி உள்ளன.

இந்நிலையில் கார்ட்டூன் நெட்வொர்க் தனது பழைய நிகழ்சிகளை ஒளிபரப்ப முடிவு செய்து அவற்றை இரவு 9 மணியிலிருந்து ஒளிபரப்புகிறது. அதன்படி ஒவ்வொரு நாளும் இரவு வேறு வேறு பழைய ப்ரோக்ராம்கள் ஒளிபரப்பாகின்றன.

என்னென்ன ப்ரோக்ராம்கள் என்று பார்ப்போமா. தி பிலிங்ஸ்டோன், பவர் பாப் கேள்ஸ், ஜானி பிராவோ மற்றும் நம் அனைவருக்கும் பிடித்த ஸ்கூபி டூ.scooby doo cartoon

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: நம்மை மீண்டும் குழந்தையாக்கும் தந்திரம் அன்னையிடமும் கார்ட்டூன்னிடமும் மட்டும்தான் உள்ளது.

Comments

comments

More Cinema News: