வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

உச்சம் தொட்ட அமரன்.. நான்கே நாளில் கேரியர் பெஸ்ட் கலெக்சன் பார்த்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை மக்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். முதல் முதலாக ஒரு மாறுபட்ட, தனக்கு சிறிதளவும் ஒத்து வராத சீரியஸான கதாபாத்திரத்தில், குறிப்பாக ஒரு உண்மை கதையில், நடித்து ஜெயித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்திய ஆர்மியில் எட்டு வருடம் பணிபுரிந்து, தாய் நாட்டிற்காக உயிரை விட்ட மேஜர் முகுந்து வரதராஜனின் உண்மை கதை. சென்னை ஆவடியில் பிறந்து தாம்பரத்தில் வளர்ந்து தன்னுடைய 23 வது வயதில் இந்திய ராணுவப்படையில் சேர்ந்து நாட்டுக்காக பணிபுரிந்து போர்க்களத்தில் மாண்டவர் மேஜர் முகுந்த் வரதராஜன்.

இவரின் கதை தான் அமரன் படம். இன்று குடும்பங்கள் போற்றும் படமாக அனைத்து தியேட்டர்களிலும் பட்டையை கிளப்பி வருகிறது. முதன்முதலாக ஒரு ராணுவப் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்து அனைத்து திறப்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். குடும்பத்துடன் சென்று இந்த படத்திற்கு மக்கள் பேராதரவு அளித்து வருகின்றார்கள்.

இந்த படத்தை பார்த்த அனைவரும் மேஜர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்திற்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அமரன் படம் ரிலீஸ் ஆகி இதுவரை ஆறு நாட்கள் ஆகியுள்ளது. அதற்குள் 78 கோடிகள் தமிழ்நாட்டில் மட்டும் வசூலித்து சாதனை செய்துள்ளது.

சிவகார்த்திகேயன் கேரியரில் ரிலீசான குறுகிய நாட்களில் அதிக வசூல் தந்த படம் அமரன்தான். இதற்கு முன்னர் சிவாவிற்கு அதிக வசூல் தந்த படம் அயலான் மற்றும் வேலைக்காரன். அமரன் படம் வசூல் வேட்டை ஆடி வருவதால் இந்த படத்தை தயாரித்த கமல் குஷி மூடில் இருக்கிறார்.

- Advertisement -

Trending News