அக்கரை, பாசத்தில் தான் ஆணவக் கொலை, அது வன்முறை இல்ல.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாக்யாவின் லவ்வர் பசுபதி

Ranjith Controversy: 90களில் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் ரஞ்சித், நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே நடிகை பிரியா ராமனை காதலித்து கல்யாணம் பண்ணார். பிறகு இவர்களுக்கு ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டார்கள். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்கள் நடித்து வந்த ரஞ்சித் கடைசியாக 2015 ஆம் ஆண்டு சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து சின்னத்திரை மூலம் மீண்டும் அடி எடுத்து வைத்தார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை உருகி உருகி காதலிக்கும் லவ்வராக பழனிச்சாமி கேரக்டரில் நடித்து வருகிறார். அப்படிப்பட்டவர் சமீபத்தில் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி அதை நடிக்கவும் செய்திருக்கிறார்.

ஆணவக் கொலைக்கு ஒத்து ஊதிய ரஞ்சித்

இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஞ்சித் சர்ச்சைக்குரிய பதிலை கூறியிருந்தார். அதாவது “நாடகக் காதலை எதிர்ப்பதால் நான் சாதி வெறியன் என்றால், ஆம் நான் சாதி வெறியன் தான் எனக் கூறி சர்ச்சையில் மாட்டினார்.

தற்பொழுது மீண்டும் சர்ச்சை ஆகும் வகையில் பேசியிருக்கிறார். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த ரஞ்சித் இடம் வைக்கப்பட்ட கேள்வி ஆணவ கொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதில் அளித்த ரஞ்சித், ஆணவக் கொலை என்பது ஒரு உணர்ச்சிவசப்பட்டு நடக்கும் சம்பவம் தான். பிள்ளைகள் செய்யும் காதலால் பெற்றோர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு தான் அதனுடைய வலி தெரியும். நம்ம பைக்கை அல்லது செல்போனை யாராவது திருடிவிட்டால் அவர்களை கண்டுபிடித்து திட்டி உடனே அடிக்க கை ஓங்கி விடுவோம். சாதாரண பொருள்களுக்கு அவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறோம் என்றால் ஆசை ஆசையாக பெற்று வளர்த்த பிள்ளைகள் ஒரு தவறான வழியில் போகிறார்கள் என்று தெரிந்தால் அதை கண்டிக்கும் விதமாகவும் அந்த பிள்ளைகள் மீது இருக்கும் பாசமும் அக்கறையும் காரணமாகத்தான் ஆணவக் கொலை நடக்கிறது.

இது ஒன்னும் வன்முறையோ கலவரமோ ஏற்படுத்துவதற்காக அல்ல. எது நடந்தாலும் பிள்ளைகள் மீது இருக்கும் பாசத்தினால் தான் நடக்கிறது என்று ஆணவக் கொலைக்கு சாதகமாக ரஞ்சித் பதில் அளித்திருக்கிறார். இவர் கொடுத்த பதிலால் இவருக்கே கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் எதிர்ப்பு குரல்கள் எழும்பி வருகிறது.

சாதி ஆணவக் கொலைகளை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வரும் இந்த நிலையில் ஆணவக் கொலை என்பது வன்முறை அல்ல, அக்கறை தான் என ரஞ்சித் விளக்கம் கொடுத்திருப்பது பெரிய சர்ச்சையாக வெடித்து வருகிறது.

Next Story

- Advertisement -