Connect with us
Cinemapettai

Cinemapettai

காரை விட விலை உயர்ந்த காஸ்ட்லி கார் சாவிகள்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காரை விட விலை உயர்ந்த காஸ்ட்லி கார் சாவிகள்.

ஸ்மார்ட் கி, டச் ஸ்க்ரீன் கி, வெள்ளி தங்கம் வைரத்தினாலான கி என்று தற்போது வெளிநாடுகளில் ஆச்சர்யத்தக்க விலையுயர்ந்த கார் சாவிகள் வந்தவண்ணம் உள்ளன. ஒவ்வொரு கார் நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைக்க போட்டியாளர்களின் சாவிகளை விட வசதியான விலையுயர்ந்த சாவிகளை மேம்படுத்தி உருவாக்குகின்றனர்.
அதுகுறித்து சில தகவல்களை இந்த பகிர்வில் காண்போம்

பகானி ஹுவைரா கார் சாவி:

கார் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட அதே விலையுயர்ந்த உலோகத்தை கொண்டு இந்த சாவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாவியை இரண்டாக கழற்றலாம். ஒரு பாகம் சாவியாகவும் மற்றொரு பாகம் பிளாஷ் டிரைவாகவும் பயன்படும்.

விலை: இந்திய ரூபாயில் 2.23 லட்சம்

————————–

கும்பர்ட் அப்போலோ கார் சாவி:

உயர்தர தோலினாலான இந்த சாவி பல்வேறு ரிமோட் கண்ட்ரோல் வசதிகளை உள்ளடக்கியது. பார்பதற்கு வெள்ளி ஆபரணம் போல் அனைவர் கண்ணையும் பறிக்கும் அழகு கொண்டது.

விலை: இந்திய ரூபாயில் 4 லட்சம்

பென்ட்லியின் வைர கார் சாவி:

அலெக்சாண்டர் அமேஸ் நிறுவனத்தின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் பென்ட்லியின் வைர கார் சாவி சுமார் 100 வைர கற்கள் பதிக்கப்பட்டது.

விலை: இந்திய ரூபாயில் 5 லட்சம்

———————————–

பெராரி கார் சாவி:

இந்த சாவியில் சுமார் 1100 வைர கற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வைரத்தின் எடை மட்டும் 7 கேரட்டுகள். தி ஹவுஸ் ஆப் கேமல் நிறுவனத்தின் கைவண்ணத்தில் உருவானது இந்த சாவி.

விலை: இந்திய ரூபாயில் 13 லட்சம்

———————————————

ஆஸ்ட்டன் மார்ட்டின் கார் சாவி:

வாட்ச் வடிவத்தில் முதன் முறையாக சாவியை உருவாக்கியுள்ளனர் ஆஸ்ட்டன் மார்ட்டின் நிறுவனத்தினர்.

வாட்ச் போலவே கையில் கட்டிக் கொள்ளலாம்; கையில் கட்டியபடியே இதை ஆபரேட் செய்யலாம்; 8-9 மணி வரை உள்ள பட்டன் மூலம் காரை அன்-லாக் செய்யலாம்; 3-4 வரை உள்ள பட்டனை அழுத்தி காரை லாக் செய்யலாம்; இரண்டையும் சேர்த்து அழுத்தினால், ‘ஃபைண்ட் மீ லேம்ப்’ ஆன் ஆகி, கூட்டமான பார்க்கிங் ஏரியாவில் காரைக் கண்டுபிடிக்க உதவுகிறது.

மார்ட்டின் ரேபிட் மற்றும் DBS சூப்பர் கார்களுக்கான கடிகாரச் சாவியான இதை, ஆஸ்ட்டன் மார்ட்டினும், jaeger lecoultre என்ற கடிகார நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது.

விலை: இந்திய ரூபாயில் 20 லட்சம்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: நாற்காலி வாங்கவே இங்க மூக்கால அழுகுறோம். நீங்க என்னடானா சப்ப சாவிக்கே இவ்ளோ விலை சொல்றிங்களேடா!!!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top