பாலிவுட் திரைப்படங்களில் மற்றும் விளம்பரப் படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகை ஆவார். சமூகவியல் பட்டபடிப்பு முடித்தவுடன், வித்யா பாலன், தனது திரைத்துறை பயணத்தை பல இசைக் காணொளிகள், சவற்கார விளம்பரங்கள் மற்றும் பல வணிகரீதியிலானவற்றில் தொடங்கி, பாலோ தேகோ (2003) என்னும் வங்காள திரைப்படத்தில் நடித்ததன் மூலம், திரைத்துறைக்குள் நுழைந்தார்.

பிறகு இவர் இந்தி திரைப்படமான பரிநீத்தா (2005) என்பதில் அறிமுகமாகி, பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினைப் பெற்றார் மேலும் தனது முதல் வணிக வெற்றியை ராஜ்குமார் ஹிரானியின் லகே ரஹோ முன்னாபாய் (2006) படத்தின் மூலம் பெற்றார் அதைத் தொடர்ந்து ஹே பேபி (2008) மற்றும் பூல் பூலையா (2008) ஆகிய படங்களில் நடித்தார்.

அதில் பூல் பூலையாவில் தனது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேரின் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 2009 இல் ஆர். பால்கியின் திரைப்படமான பாவுக்கு, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார். 59வது தேசியத் திரைப்பட விருதுகளில் டர்ட்டி பிக்சர் என்ற இந்தித் திரைப்படத்திற்காக சிறந்த நடிகை விருதைப் பெற்றார்.

சில்க் ஸ்மிதா வாழ்க்கையைப் பற்றிய படமான ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்தவர் வித்யா பாலன். பாலிவுட் உள்பட பல மொழிகளில் நடித்து வருகிறார். சென்சார் போர்டு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார் வித்யா பாலன்.

இவர் மும்பையில் பாந்த்ரா நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது எதிர்பாராவிதமாக இன்னொரு கார் மீது இவரது கார் மோதியிருக்கிறது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகை வித்யா பாலனுக்கு எதுவும் ஆகவில்லை. சிறு சிறு காயங்களோடு தப்பியிருக்கிறார்.

சினிமா நடிகர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர்களது ரசிகர்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. என்ன ஆனது எப்படி ஆனது எனப் புலம்ப ஆரம்பித்து விடுவார்கள். சினிமா நடிகர்கள் கார் விபத்தில் சிக்கி வருவதும் வாடிக்கையாகி வருகிறது.

வித்யா பாலனின் கார் விபத்துக்குள்ளான செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைச் செய்தாலும் அவருக்கு எதுவும் ஆகவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்துள்ளது.

வித்யா பாலன் கேரளாவின், பாலக்காட்டில் உள்ள ஒரு தமிழ் பேசும் ஐயர் குடும்பத்தில், பி.ஆர். பாலன் (இ.டி.சி சேனலின் துணைத்தலைவர்) என்பவருக்கும் இல்லத்தரசியான சரசுவதி பாலனுக்கும் பிறந்தார். வித்யாவிற்கு பிரியா என்னும் மூத்த சகோதரி ஒருவரும் உள்ளார். ஒரு காணொளி நேர்காணலில், இவர் தன்னை ”மிகுந்த கடவுள் நம்பிக்கையுடைவர்” என்றும், தான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோவில் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வித்யா பாலன் தன் பள்ளிப்படிப்பை புனித அந்தோணி பள்ளியிலும் அதன் பிறகு தனது சமூகவியல் பட்டப் படிப்பை புனித சேவியர் கல்லூரியிலும் முடித்துள்ளார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலை (எம்.ஏ) படிப்பைப் படிக்கும் பொழுது, தனது முதல் திரைப்பட வாய்ப்பைப் பெற்றார்.