Home Tamil Movie News உங்க புள்ளைங்க கல்யாணத்துக்கு என்ன கூப்பிடாதீங்க சிவகுமார்.. கேப்டன் கண்டிசன் போட இதுதான் காரணம்

உங்க புள்ளைங்க கல்யாணத்துக்கு என்ன கூப்பிடாதீங்க சிவகுமார்.. கேப்டன் கண்டிசன் போட இதுதான் காரணம்

captain
captain

Captain Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நல்ல நடிகர் என்பதைத் தாண்டி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அளப்பரிய பணிகளை செய்து இருக்கிறார். இப்போது அவர் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலுமே ஆக்டிவாக இல்லாத நேரத்தில் தான், அவரைப் பற்றிய நிறைய விஷயங்கள் வெளியில் வருகிறது. அதில் ஒன்றுதான் சிவகுமாரிடம் கேப்டன் கண்டிப்பாக உத்தரவு போட்டு சொன்ன விஷயம்.

நடிகர் சிவகுமார் எம்ஜிஆர் காலத்தில் தொடங்கி இன்றைய இளம் நடிகர்கள் வரை எல்லோருடனும் இணைந்து நடித்தவர். அவர் வீட்டில் ஒரு விசேஷம் என்றால் ஒட்டுமொத்த தென்னிந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் அந்த இடத்தில் ஆஜராகி விடுவார்கள். அப்படி இருக்கும் போது சிவக்குமார் வீட்டு கல்யாணத்துக்கு என்னை கூப்பிடாதீங்க என்று அவரிடமே உத்தரவு போட்டு இருக்கிறார் விஜயகாந்த்.

Also Read:டாப் 10 படத்தின் டிஆர்பி ரேட்டிங்கை வெளியிட்ட கலைஞர் டிவி.. சிம்மாசனம் போட்டு முதலிடத்தில் சூர்யா

தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கல்யாணம் என்றால் அது சூர்யா மற்றும் ஜோதிகாவின் கல்யாணம் தான். நீண்ட வருட காதலர்களாக இருந்த அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். சிவகுமார், ஜோதிகா, சூர்யா மூன்று பேருமே சினிமா உலகத்தில் இருப்பவர்கள் என்பதால் அவர்களுடைய வீட்டு கல்யாணத்திற்கு அத்தனை நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள்.

விஜயகாந்த் போட்ட கண்டிஷன்

கேப்டன் விஜயகாந்த் மட்டும் அந்த கல்யாணத்துக்கு வரவில்லை. இத்தனைக்கும் சூர்யாவுடன் பெரியண்ணா என்னும் படத்தை நடித்து அவரை சினிமா ரசிகர்களிடையே பரீட்சையம்மாக்கியவர் விஜயகாந்த். அப்படி இருந்தும் அவர் திருமணத்திற்கு வராதது சந்தேகமாக இருந்தது. உண்மையில் கல்யாணத்திற்கு அழைக்க சென்ற சிவகுமாரிடம், என்னை நீங்கள் கூப்பிட வேண்டாம். நீங்கள் கூப்பிட்டால் என்னால் வராமல் இருக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார் விஜயகாந்த்.

நடிகர் சிவகுமார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நெருக்கமானவர். அதே நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் இணைந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறார். இவர்கள் இருவருமே சூர்யா ஜோதிகா கல்யாணத்திற்கு வந்திருந்தார்கள். அந்த சமயம் தான் விஜயகாந்த் அரசியலில் ஒரு நிலையான தலைவனாக உருவாகிக்கொண்டிருந்த நேரம்.

சிவக்குமார் அழைத்தால் கல்யாணத்திற்கு போகாமல் இருக்க முடியாது, அதே நேரத்தில் அரசியலில் தேவையில்லாத தர்ம சங்கடமான சூழ்நிலையையும் உருவாக்கி விடக்கூடாது என்பதில் விஜயகாந்த் கவனமாக இருந்திருக்கிறார். அவர் எதிர்த்து நின்ற தலைவர்கள் என்றாலும் அவர்களுக்கு கஷ்டமான ஒரு சூழலை உருவாக்க கூடாது என கேப்டன் நினைத்திருப்பது ரொம்பவே பெரிய விஷயம் தான்.

Also Read:மீண்டும் மருத்துவமனையில் விஜயகாந்த்.. பதறிப்போன தொண்டர்கள், தேமுதிக வெளியிட்ட அறிக்கை