Tamil Cinema News | சினிமா செய்திகள்
வீடு திரும்பிய கேப்டன்! ஆரவாரத்தில் கூச்சலிடும் ரசிகர்கள்!
கடந்த வாரம் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த்.
இவர் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு அவருடைய மனைவி பிரேமலதாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கேப்டனுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அறிந்த அவருடைய கட்சித் தொண்டர்களும் ரசிகர்களும் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்தனர்.
தற்போது கேப்டனும் அவருடைய மனைவியும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
வீடு திரும்பிய கேப்டன் விஜயகாந்தும் அவருடைய மனைவியும் ஓரிரு வாரங்கள் யாரையும் சந்திக்காமல் முழு ஓய்வில் இருக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

vijayakanth-2
எனவே கேப்டன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு காரில் வந்து இறங்கிய அக்கணமே தொண்டர்கள் ஆரவாரத்துடன் கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
