100 கோடி கிளப்பில் இணைந்த கேப்டன் மில்லர்.. தட்டு தடுமாறும் அயலான்

Captain Miller, Ayalaan Collection : இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படங்கள் இரண்டுமே தற்போது வரை திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு போட்டி நடிகர்களாக பார்க்கப்படும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் வெளியானதால் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

ஆரம்பத்தில் அயலான் படம் அதிக வசூல் செய்த நிலையில் கேப்டன் மில்லர் படம் பின் தங்கியது. ஆனால் கடந்த சில நாட்களாகவே கேப்டன் மில்லர் படத்திற்கு வரவேற்பு கிடைத்து அதிக வசூல் பெற்று வந்தது. இதன் காரணமாக 14 நாட்களில் 105 கோடி வசூல் செய்து உள்ளது.

ஆனால் அயலான் படம் தற்போது வரை 100 கோடியை தாண்ட முடியாமல் தட்டு தடுமாறி வருகிறது. அதாவது 14 நாட்களில் வெறும் 83 கோடி வசூல் செய்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான டாக்டர், டான் படங்கள் 100 கோடி வசூல் செய்திருந்தது. ஆகையால் அயலான் 100 கோடியை நெருங்குமா என்ற சந்தேகத்தில் இருக்கிறது.

Also Read : சதுரங்க வேட்டையின் பிரம்மாண்ட பதிப்பு.. அஜித் டைரக்டருக்கு சான்ஸ் கொடுத்த தனுஷ்

மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கேப்டன் மில்லர் படம் 70 கோடி வசூலும், அயலான் படம் 60 கோடி வசூலையும் பெற்று இருக்கிறது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த இரு படங்களின் வசூலும் அதிகரிக்க வாய்ப்பு இருந்தது.

ஆனால் நேற்றைய தினம் அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் மற்றும் ஆஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படங்கள் வெளியாகி இருந்தது. இதில் ப்ளூ ஸ்டார் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் ரசிகர்கள் அதிகம் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.

Also Read : தீண்டாமைக்கு துணை போன தனுஷ்.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

- Advertisement -spot_img

Trending News