Reviews | விமர்சனங்கள்
அதிரடி ராணி, அசத்தல் தான் நீ – கேப்டன் மார்வெல் திரைவிமர்சனம்.
மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்சில் வெளியாகும் 21 வது படம். இப்படம் உலகின் பல பகுதிகளில் மகளிர் தினமான மார்ச் 8 வெளியாகி நல்லா வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு பெண் சூப்பர் ஹீரோவை மட்டுமே மையப்படுத்தி வெளியாகும் முதல் மார்வெல் படம் இது தான். 1995 இல் நடப்பது போன்ற கதைக்களம். கரோல் டாண்வர்ஸ் எவ்வாறு கேப்டன் மார்வெல் ஆக மாற்றம் அடைகிறாள் என்பது தான் இப்படத்தின் கதை. அன்னா போடென் , ரியான் பிளேக் இணைந்து இயக்கியுள்ளார். கதையின் நாயகி ரோலில் பிரிய் லார்சன் கலக்கியுள்ளார். துணை கதாபாத்திரத்தில் நிக் பியூரியாக சாமுவேல் ஜாக்சன் அசத்தியுள்ளார்.
கதை
க்ரீ மற்றும் ஸ்க்ருல் இருவருக்கும் உள்ள பிரச்னையை மையப்படுத்தி தான் முழு கதையும் அமைந்துள்ளது. தான் என்பதை மறந்த நிலையில், தன் சக்தியை கட்டுப்பாட்டில் வைக்கும் முயற்ச்சியில் ஈடு படம் வீர்ஸ் உடன் படம் ஆரம்பம் ஆகிறது. உளவாளி ஒருவனை மீட்க செல்லும் பொழுது ஸ்க்ரல்ஸ் (உருமாறும் திறன் கொண்டவர்கள்) வசம் சிக்குகிறாள் நாம் நாயகி. அவளின் மூலையில் இருந்து சில தகவல்களை எடுக்கல முயல அங்கிருந்து தப்ப முயல்கிறாள்.
அவளின் மூலையில் அறிந்த விஷயம் வாயிலாக ஸ்க்ரல் குழு பூமி நோக்கி செல்கிறது. இவளும் வருகிறாள். பூமியில் நடக்கும் சம்பவங்கள் பிளாஷ் பேக், தான் யார் போன்ற விவரங்களை அறிய நேர்கிறது.

captain-marve
அதன் பின் தீமைக்கு எதிராக, நமக்கு ஆதரவாக போராடி வெற்றி பெறுகிறாள். தான் யார், தனது சக்தி என்னவென்று முழுவது புரியும் நிலைக்கும் வந்துவிடுகிறாள்.
படத்தில் அனைத்துமே பிளஸ் என்று தான் சொல்ல வேண்டும்.
சிம்பிள் கதை, நேர்த்தியான திரைக்கதை, கிராபிக்ஸ், காமெடி பகுதிகள், எமோஷனல் தருணங்கள் என அனைத்துமே.
எனினும் ஸ்க்ரல் பற்றிய தெளிவான அறிமுகமாக இது அமைந்துள்ளது. மேலும் சக்தி வாய்ந்த ட்டெஸ்ஸராக்கட். கூஸ் என்ற விலங்கு. SHIELD ஏஜென்ட் பியூரி என பலவற்றிற்கான பில்டபார்ம் இப்படம்.
அதே போல் அவென்ஜர்ஸ் எண்டு கேம் பற்றிய க்ளுவுடன் முடிகிறது படம்.
சினிமாபேட்டை வெர்டிக்ட்
காமிக்ஸ் ரசிகர்கள் என்றெல்லாம், ஹாலிவுட் படம் பார்க்க செல்பவனுக்கும் எளிதில் புரியும் வகையில் அமைந்ததே கூடுதல் ஸ்பெஷல். படம் முடியும் சமயத்தில், அட அதற்குள் இரண்டு மணி நேரம் முடிந்ததா என்ற யோசனையுடன் வெளியே வருபவர்களே அதிகம்.
சினிமாபேட்டை ரேட்டிங் 3.5 / 5
