fbpx
Connect with us

தன் பயோபிக்கின் நிறை குறைகளை சுட்டி காட்டிய கேப்டன் கோபிநாத்! கண்டதே காட்சி கொண்டதே கோலம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தன் பயோபிக்கின் நிறை குறைகளை சுட்டி காட்டிய கேப்டன் கோபிநாத்! கண்டதே காட்சி கொண்டதே கோலம்

ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தும் கதை. அவர் எழுதிய புத்தகத்தை வைத்தே படத்தை ரெடி செய்தனர் சுதா கொங்கரா & டீம்.

இப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி விமர்சகர்கள், ரசிகர்கள் என பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யாவின் அசரவைக்கும் நடிப்பில் தரமான படம் தான் சூரரைப் போற்று. அதே போல் மனைவி ரோலில் நடித்துள்ள அபர்ணா பாலமுரளி இணையாக கலக்கியுள்ளார்.

suriya-soorarai-potturu-1

suriya-soorarai-potturu-1

இந்நிலையில் இப்படத்தினை பார்த்த பின் கோபிநாத் அவர்கள் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து பின்வருமாறு.

“சூரரைப் போற்று… நிறையக் கற்பனை இருந்தாலும், என்னுடைய புத்தகத்தின் மையக் கருவை அற்புதமாகப் படம்பிடித்துள்ளது. உண்மையான ரோலர் கோஸ்டர் அனுபவம். ஆம் நேற்று இரவு பார்த்தேன். பழைய நினைவுகளைத் தூண்டிய குடும்பக் காட்சிகளில் பல நேரத்தில் சிரிப்பையும் அழுகையையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

captain gopinath tweet 1

நாடகத்தன்மை இருந்தாலும், பெரும் முரண்பாடுகளுடன் கூடிய பின்தங்கிய கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட ஒரு தொழில்முனைவோரின் போராட்டங்கள் மற்றும் இன்னல்களுக்கு எதிரான நம்பிக்கைக்கு உண்மை சேர்க்கிறது.

என் மனைவி பார்கவியாகச் சித்தரிக்கப்பட்டுள்ள அபர்ணா சரியான தேர்வு. தனக்கென்று கனவுகளுடன் கூடிய, வலிமையான அதே நேரம் மென்மையான, ஆர்வம் நிறைந்த அச்சமில்லாத ஒரு பெண்ணான அவர் கிராமப்புறப் பெண்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறார்.

கனவுகளை நனவாக்கும் பைத்தியக்காரத்தனத்தை மனதில் கொண்டிருக்கும் ஒரு தொழில்முனைவோர் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா தனது சக்திவாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற இருண்ட காலங்களில் உத்வேகம் அளிக்கக் கூடிய திரைப்படம்.

captain gopinath tweet

மேலும் இயக்குனர் சுதாவுக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும். சூர்யா போன்ற பவர்புல் கதாபாத்திரத்தின் கதையில், மனைவி அபர்ணா ரோல் வாயிலாக சிறப்பான சமநிலையை உத்வேகத்துடன், மனதுக்கும் இதமாக கொடுத்ததற்கு.” என பதிவிட்டுள்ளார்.

Continue Reading
To Top