Connect with us

Cinemapettai

மற்ற டீம்களில் இருந்து ஒரு வீரரை தேர்வு செய்யச் சொன்னால் ? கேப்டன்களின் சுவாரஸ்யமான பதில் உள்ளே. உலகக்கோப்பை 2019 .

Sports | விளையாட்டு

மற்ற டீம்களில் இருந்து ஒரு வீரரை தேர்வு செய்யச் சொன்னால் ? கேப்டன்களின் சுவாரஸ்யமான பதில் உள்ளே. உலகக்கோப்பை 2019 .

மே 30-ம் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை நடைபெற உள்ளது. இந்திய வீரர்கள் இன்று பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் உடன் ஆட உள்ளனர்.

உலகக்கோப்பை தொடர் ஆரம்பிக்கும் முன்பே பல விதமான விளம்பரங்கள், ப்ரோமோஷன்ஸ் என அசதி வருகின்றது இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட். பயிற்சி போட்டிகள் நடந்து வருகின்றது. இம்முறை 10 டீம்கள் பங்கேற்கின்றனர். மேலும் ரவுண்ட் ராபின் முறைப்படி இவர்கள் ஆடுவது இம்முறை கூடுதல் சிறப்பு.

கடந்த சில தினங்களுக்கு முன் அனைத்து கேப்டன்களும் கலந்துகொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவர்களிடம் பல சுவாரஸ்ய கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் முக்கியமானது, பிற அணியிலிருந்து உங்கள் அணிக்கு ஒரு வீரர் வேண்டும் என்றால் யாரை எடுப்பீர்கள் என்பதே அது.

அதற்கு வீரர்கள் கூறிய பதில்கள் இதோ ..

இலங்கை கேப்டன் திமுத் கருணாரத்னே – எங்களுக்கு இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வேண்டும்.

தென்னாப்பிரிக்கா கேப்டன் டூப்பெளஸ்ஸிஸ் – பௌலிங் என்றால் ரஷித் கான் அல்லது பும்ரா, பேட்டிங் என்றால் விராட் கோலி.

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் – எனக்குப் பந்துவீச்சாளர்தான் தேவை, ஆதலால் ரஷித் கான்.

பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் கான்: ஜோஸ் பட்லர் .

மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர்: எங்கள் அணி சிறப்பாக இருக்கிறது. மற்ற அணியிலிருந்து வீரர்கள் தேவை இல்லை.

வங்கதேச கேப்டன் மோர்டசா – அவர்தான் எங்களுக்கு வேண்டும் என கோலியை கை காட்டினார்.

ஆஃப்கானிஸ்தான் கேப்டன் குல்பதீன் நையீப் – அது அன்றைய ஆட்டத்தின் சமயத்தில் தான் சொல்ல முடியும். மாறுபடவும் செய்யும்.

ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் –  தென்னாப்பிரிக்காவின் ரபாடா இருந்தால் கூடுதல் பலமாக இருக்கும்

இந்திய அணியின் கேப்டன் கோலி –  டூப்பெளஸ்ஸிஸ்

இங்கிலாந்து அணியின் கேப்டன் மார்கன் “நான் மற்ற அணியிலிருந்து ஒரு வீரரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளர் (ரிக்கி பான்டிங் ) எங்களது பயிற்சியாளர் ஸ்டாபாக  ஆக இருக்க வேண்டும் என்பேன்” என்றார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top