Sasikala-Hat

சசிகலா அணி தரப்பில் கிரிக்கெட் பேட், கத்தரிக்கோல், தொப்பி , ஆட்டோ ரிக்‌ஷா ஆகிய மூன்று சின்னங்களில் ஒன்றை ஒதுக்குமாறும் அதிமுக அம்மா அணி என்ற கட்சி பெயரை ஒதுக்குமாறும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தது.

சசிகலா அணிக்கு ஆட்டோ ரிக்‌ஷாவை சின்னமாகவும் அவர்கள் பரிந்துரைத்த ”அதிமுக அம்மா” என்பதைக் கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

பின்னர் ஆட்டோ ரிக்‌ஷாவுக்குப் பதிலாக தொப்பி சின்னத்தைக் கேட்டதால் அதை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், சசிகலா அணிக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கியது.