கேன்ஸ் பட விழாவில் கலந்து கொண்ட நடிகை மல்லியாக ஷெராவத் தன்னை கூண்டுக்குள் அடைத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

71வது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ப்ரான்ஸில் மே 9ந் தேதி தொடங்கிய இவ்விழா வரும் 19ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் இந்திய திரையுலகம் சார்பாக தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய், கங்கனா ரனாவத், சோனம் கபூர், மல்லிகா ஷெராவத், தனுஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல் நாள் விழாவில் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மெகா உடையில் அனைவரையும் கவர்ந்தது வைரலாகியது. இதையடுத்து பலரும் ஆடைகளிலே கவனம் செலுத்தி ட்ரெண்ட் அடித்தனர். ஆனால் மல்லிகா ஷெராவத் ஒரு வித்தியாசமான முயற்சியை கையாண்டதால் சமூக வலைத்தளத்தில் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறார்.

அதிகம் படித்தவை:  ஷங்கரை வருத்தப்பட வைத்த தலைப்பு

மல்லிகா ஷெராவத் லாக் மீ அப் எனும் பிரசாரத்தினை பின்னணியாக கொண்டு கேன்ஸுக்கு வருகை தந்து இருக்கிறார். இந்த பிரச்சாரம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்புணர்வுகளை எதிர்த்து அரசு சாரா அமைப்பு நடத்தி வருகிறது. இதற்காக சாதாரண உடையில் ஒரு கூண்டுக்குள் 12 மணி நேரமாக அடைப்பட்டு இருந்தார். இது சமூக வலைத்தளம் முழுவதும் பெரும் வைரலாக பரவியது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மல்லிகா, 9வது முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளேன்.

அதிகம் படித்தவை:  Shriya Saran Latest Stills

உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி சென்று சேரும் என்பதால், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் எனத் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு பாலியல் வன்புணர்வு கொடுமை அதிகரித்து வருகிறது. இதற்காக பிரபலங்கள் பலரும் எதிர்ப்புகள் குரலை பதிவு செய்து வரும் நிலையில், மல்லிகா ஷெராவத்தின் இந்த வித்தியாசமான முடிவு அனைவரிடத்திலும் பாராட்டு பெற்றுள்ளது.