Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஐஸ்வர்யா ராயின் கேன்ஸ் விழா ஆடை வடிவமைப்பிற்கு எத்தனை நாள் எடுத்தது தெரியுமா?
கேன்ஸ் திரைப்பட ரெட் கார்ப்பெட்டில் பட்டாம் பூச்சியாக வந்த ஐஸ்வர்யா ராயின் பிரத்யேக ஆடைக்கு 125 நாட்கள் எடுத்ததாக சுவாரசிய தகவல் வெளியாகி இருக்கிறது. பிரம்மாண்டமாக நடைபெறும் திரைப்பட விழாக்களில் கேன்ஸும் ஒன்று. வருடா வருடம், பாரீஸின் பிரென்ச் ரிவேரா என்ற இடத்தில் இவ்விழா நடைபெற்று வருகிறது. மே 9ல் தொடங்கிய திரைப்பட விழா 19ந் தேதி வரை இந்தாண்டு நடைபெற இருக்கிறது. கேன்ஸில் விழாவில் தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், கங்கனா ரணாவத் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தியத் திரையுலகம் சார்பில் கலந்து கொண்டு இருக்கின்றனர். பிரபலங்களை போல அவர்களது உடைகளும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெறும்.
கேன்ஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்ப்பெட் அங்கீகாரம் என்பது எல்லாருக்குமே கிடைக்காது. ஆனால், நடிகை ஐஸ்வர்யா ராயிற்கு பல ஆண்டுகளாக இந்த அங்கீகாரம் கிடைத்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் அவர் அணிந்து வரும் ஆடை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பர். 44 வயதான ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் 17வது கேன்ஸ் திரைப்பட விழா இது என்பதால் ஆவல் கூடுதலாகவே இருந்தது. முதல் நாள் கேன்ஸ் விழாவில் பட்டாம் பூச்சி உடையில் வந்த ஐஸ்வர்யா ராய் சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் அடித்தார்.
இந்நிலையில், பட்டாம் பூச்சி தோகை போல 10 அடிக்கு எம்பிராய்டரி செய்யப்பட்ட இந்த உடையை தயாரிக்க சுமார் 125 நாட்கள் எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஆடையை பிரபல ஆடை வடிவமைப்பாளர் மைக்கேல் சின்கோ வடிவமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
