Connect with us
boomerang-movie

கனடாவில் தமிழர்களின் பெரும் ஆதரவுடன் தலைவராகிய அன்ரூ செயர்

News | செய்திகள்

கனடாவில் தமிழர்களின் பெரும் ஆதரவுடன் தலைவராகிய அன்ரூ செயர்

கனடாவின் எதிர்கட்சியான பழமைவாதக்கட்சி முன்னால் பிரதமர் ஸ்ரீபன் காப்பர் தலைமைத்துவ பதவியில் இருந்து விலகியபின் 16 மாதங்களாக தொடர்ந்த புதிய தலைமைக்கான பரப்புரைகளின்பின்னர் நடைபெற்ற வாக்களிப்பில் 38 வயது நிரம்பிய அன்ரூ செயர் புதிய தலைவராக தெரிவு செய்;யப்பட்டார்.

259010 கட்டணம் செலுத்திய கட்சி உறுப்பினர்களைக் கொண்ட பழமைவாதக் கட்சியில் 132000 பேர் முன்கூட்டியே தபால் மூலம் தம் வாக்கை அளித்திருந்தனர். ஒன்ராறியோவின் மிசுசாகாவில்நடைபெற்ற கட்சி மநாட்டில் நேரடியாக அளிக்கப்பட்ட வாக்குகளுடன் சேர்த்து 141362 பேர் ஈற்றில் வாக்களித்தனர்.

இதில் 1700 மேற்பட்ட தமிழர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ரொன்ரோ பெரும்பாகம் ஒட்டாவா மொன்றியல் வன்கூவர் என தமிழ் உறுப்பினர்கள் வாக்களித்தனர். 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த போட்டி ஈற்றில் மூவர் விலகிவிட 13பேருடன் போட்டிக்களத்தை சந்தித்தது.

Maxime Bernier, Kellie Leitch, Michael Chong, Andrew Scheer, Lisa Raitt, Deepak Obhrai, Chris Alexander, Steven Blaney, Erin O’Toole, Pierre Lemieux, Rick Peterson, Andrew Saxton and Brad Trost ஆகியோரே இறுதி களத்தில் மோதினர். இதில் முன்னாள் அமைச்சர் மக்சி பேனியரே வெற்றி பெறுவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகஇருந்தது.

சமீப காலமாக தமிழ் அரசியல் பலத்தை கட்சிகள் உணர்ந்து கொண்டுள்ளதால் தமிழர்களை நோக்கிய பார்வை இத்தேர்தலிலும் வெளிப்பட்டது. அன்ரூ செயர் கிரிஸ் அலெக்ஸ்டாண்டர் கெலி லீச்ஆகியோர் முள்ளிவாய்க்கால் நிகழ்வை முன்னி;ட்டு அறிக்கைகளை வெளியிட்டனர். இம்மூவருடனும் தமிழர்கள் இனம் சார்ந்த குழுவாக தொழிற்பட்டதால் அது சாத்தியமாகியது.

முதற்சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தம் உள்ள 33000 புள்ளிகளில் 11000 புள்ளிகளுக்கு மேல் பெற்றால் அவரின் வெற்றி உறுதி என களம் இறங்கிய மக்சி பேனியர் 9763 புள்ளிகளைஅதாவது 28.89 சதவீத வாக்குகளையே பெற்று ஏமாற்றத்தைத் தர நான்காவது இடத்தில் வருவார் என எதிர்பார்த்த அன்ரூ செயர் 7375 புள்ளிகளுடன் 21.82 சதவீத வாக்குகளைப் பெற்று பலமானஇரண்டாம் இடத்தைப்பிடித்தார்.

பின்னர் நடைபெற்ற சுற்று வாக்கெண்ணிக்கையில் இருவரும் முன்னெறினாலும் இருவருக்குமான இடைவெளி அப்படியே இருந்தது. 10 சுற்று முடிவில் மக்சி பேனியர் 11570 புள்ளிகளையும்அன்ரூ செயர் 9557 புள்ளிகளையும் பெற்றிருந்தனர். ஆனால் அடுத்த சுற்றில் இருவருக்குமான இடைவெளி வெறும் 700 புள்ளிகளாக சுருங்கியது. ஈற்றில் இறுதிச் சுற்றில் 51 சதவீதத்திற்கு சற்றுகுறைவான வாக்குகளைப் பெற்று அன்ரூ செயர் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

அன்ரூ செயர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை தமிழ் பிரதிநிதிகளைச் சந்தித்து தமிழர் விவகாரங்கள் குறித்து பேசியதும் கனடிய தமிழ் வானொலிக்கு நேரடியாக வந்து மே 17ஆம் முள்ளிவாய்க்கால்நிகழ்வு முதல் பல விடயங்களை பேசியதும் அவர் ஆதரவு பாராளு மன்ற உறுப்பினர்கள் ஈழத் தமிழர் விவகாரத்தை இக்காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் பேசியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top