கொடூர நோயால் செத்து மடியும் மான்கள்.. மனித இனத்தை டார்கெட் செய்யும் அடுத்த வைரஸ்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! இரண்டரை ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று நம்மை உலுக்கி எடுத்து சற்றே ஓய்வு எடுக்க ஆரமித்திருக்கிறது. இடையில் சீனாவில் மீண்டும் கொரோனா வேகம் எடுக்கிறது என்ற செய்தி பரவியதும், உலகமே மீண்டும் துக்கம் கொள்ள ஆரமித்தது. ஆனாலும் நல்ல வேலையாக அது எந்தவொரு பெரிய ஆபத்துக்களையும் இதுவரை உண்டாக்கவில்லை.

சமீபத்தில் உலகத்தை எச்சரித்த இன்னொரு நோய்த்தொற்று ஜாம்பி போன்ற தோற்று. இது கனடாவில் மான்களிடம் காணப்பட்டது ஜோம்பி என்பது ஹாலிவுட் திரைப்படங்களில் இடம்பெறும் ஒரு கான்செப்ட் நோய்த்தொற்று. இந்த வகை நோய்த்தொற்று வைரஸால் பாதிக்கப்படுவோர்கள், மூளை செயலற்று மனிதர்களை கொல்ல மட்டுமே எண்ணத்தோன்றும் அளவுக்கு பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.

இந்த வகை ஜாம்பி வைரஸ்களை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. தமிழில் கூட கவர்ச்சி நாயகி யாஷிகா ஆனந்த் நடிப்பில் ஜாம்பி என்ற பெயரிலேயே ஒரு படமும் கூட வந்தது. கனடா நாட்டில் சமீபத்தில் மான்கள் சில மர்மமான முறையில் இருந்துள்ளன. இதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கும்போது தான் இந்த வகை நோய்த்தொற்று காரணத்தால் பாதிக்க பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

க்ரோனிக் வேஸ்டிங் டிசீஸ் என்று அழைக்கப்படும் இந்த நோய்த்தொற்று முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது 1996ஆம் ஆண்டு. இவ்வகை நோய்த்தொற்று மான் இனத்திடம் தான் அதிகமாக தென்படுகிறது. இவை மான்களின் வரை ஆக்கிரமிப்பு செய்து, சில நாட்களில் இறந்துவிட வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் இதனால் ஜாம்பிக்கள் போல மற்ற விலங்குகளுக்கு ஆபத்து நேரடியாக ஏற்படுகிறதா? என்பதற்கு தெளிவாக எந்தவொரு பதிவும் இல்லை.

இந்த நோய்த்தொற்று மானின் மூளையை பாதிக்க செய்வதால், மான்களின் இயற்கை குணங்களான மக்களை கண்டு பயப்படுதல், மற்ற காட்டு விலங்குகளை கண்டு ஓடுதல், எந்தவகை விலங்கு என்று கணித்தல் போன்ற தன்மைகள் மறந்து திரிகின்றன. இதனால் வேட்டையாடும் விலங்குகளிடம் எளிதாக பலி ஆகின்றன. மேலும் இந்த வகை நோய்த்தொற்று,மற்ற விலங்குகளுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாக்டீரியா, வைரஸ் போன்று இந்த நோய்களை உருவாக்கும் கிருமிகள் செல்களை ஆக்கிரமிப்பு செய்வதில்லை. மாறாக மான்களின் நரம்பு மண்டலத்தை ஆக்கிரமிக்கின்றன. இதனால், மான்களின் குணாதிசயம் மாறத்தொடங்குகிறது. இந்த நோயில் இருந்து விடுபட எவ்வளவு நாள் ஆகும் என்பதும் தெளிவாக தெரியவில்லை. இதுபற்றிய ஆராய்ச்சி முழுவீச்சில் நடைபெறுகிறது.

இந்த நோய்த்தொற்று இதுவரை மனிதர்களுக்கு பரவியதாக எந்தவொரு பதிவும் இல்லை. ஆனால் இவை மக்களுக்கு பரவக்கூடியதா? அதனால் மனிதர்களுக்கு பாதிப்பு இருக்குமா? என்பதெல்லாம் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். அப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டால் குணப்படுத்துவதற்கான எந்த ஒரு மருந்தும் தற்போது இல்லையாம். இதனால் கனடாவை சேர்ந்த மலையோரம் வாழும் மக்கள் மிகுந்த பயத்துடன் காணப்படுகின்றனர். இதனைக் கட்டுக்குள் கொண்டுவர மக்களுடன் சேர்ந்து அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்