ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

மோதிப் பார்க்கலாமா? சச்சின், லாரா போன்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி.. ரசிகர்கள் குஷி!

கிரிக்கெட் மாஸ்டர்கள் என்று அழைக்கப்படும் லாரா, சச்சின் உள்ளிட்ட வீரர்கள் மீண்டும் மைதானத்தில் களமிறங்கவுள்ளனர். இப்போட்டியைக் காண ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் உள்ளனர்.

கிரிக்கெட் போட்டிக்கு என உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இன்றைக்கு கோலி, ஸ்மித் உள்ளிட்ட வீரர்கள் எப்படி கிரிக்கெட் விளையாட்டில் நட்சத்திர வீரர்களோ அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் லாரா, சச்சின் உள்ளிட்ட ஒவ்வொரு அணிகளைச் சேர்ந்த வீரரும் திறமைசாலிகளாக சர்வதேச போட்டிகளில் ஜொலித்தனர்.

அன்றைக்கு கிரிக்கெட்டில் ஜொலித்த முன்னாள் வீரர்கள் விளையாடும் போதே உலகம் போற்றும் வீரர்களாக இருந்த நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து கிரிக்கெட் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றனர்.

ஆறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள்

இந்த நிலையில், இந்த மாஸ்டர் வீரர்கள் அனைவரும் மீண்டும் களத்தில் இறங்கினால் போட்டி எப்படி இருக்கும்? என்று யோசித்து, இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் என 6 நாடுகளைச் சேர்ந்த சாம்பியன் வீரர்களைக் கொண்டு சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் நடத்தப்படவுள்ளது.

அதன்படி, வரும் நவம்பர் மாதம் ஐஎம்எல் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதில், சச்சின், லாரா, ஜாக் காலீஸ், குமார் சங்ககரா, இயன் மோர்கன், ஷேன் வாட்சன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். அதன்படி முதல்போட்டி, நாவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவுள்ளது. சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணியுடன், குமார் சங்ககரா தலைமையிலான இலங்கை அணி மோதுகிறது.

அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி

அடுத்து, ஷேன் வாட்சன் தலைமயிலான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஜாக் காலீஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா மோதுகிறது. அதேபோல் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் மோதுகிறது. அதன்பின்னர், வரும் 21 ஆம் தேதி லக்னோவில் பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாய்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதைத்தொடர்ந்து லக்னோ மைதானத்திலும், ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயணன் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடக்கவுள்ளன.

வரும் 28 ஆம் தேதி ராய்ப்பூர் மைதானத்தில் அரையிறுதிப் போட்டியும், டிசம்பர் 8 ஆம் தேதி இறுதிப் போட்டியும் 8 போட்டிகள் நடக்கவுள்ளன. முன்னாள் மாஸ்டர் வீரர்கள் இப்போட்டியில் மோதவுள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News