கேன் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் நோய்கள்.! இனிமேலாவது உஷாரா இருங்கள்

தமிழ்நாட்டில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. ஒரு மனிதன் உணவு இல்லாமல் கூட வாழ்க்கையில் வாழ்ந்து விடலாம் ஆனால் தண்ணீர் இல்லாமல் இரண்டு நாட்கள் கூட வாழ முடியாது என்பதை உணர்த்துவதற்காகவே முன்னோர்கள் ‘ நீரின்றி அமையாது உலகு ’ என கூறினர். ஆனால் தற்போது தண்ணீர் பற்றாக்குறை தமிழ்நாட்டில் அதிகரித்து கிராமங்கள், நகரங்கள்  மக்கள் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

முன்பெல்லாம் பல குளங்களில் மற்றும் ஆறுகளில் தண்ணீர் ஓட்டம் இருக்கும். ஆனால் தற்போது குளங்கள் மற்றும் ஆறுகளில் ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் இருக்கிறது. அந்த அளவிற்கு தண்ணீர் பற்றாக்குறை எழுந்துள்ளது. பல நாடுகள் தண்ணீர் பற்றாக்குறையை பார்த்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு லாரி மூலம் வாட்டர் வழங்குவதை பெருமையாக பேசி வருகிறது.

இப்படி இருக்கும் நிலையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பருகினால் என்னென்ன நோய்கள் மற்றும் பாதிப்புகள் வரும் என்பதை பார்க்கலாம்.

தற்போது பல இடங்களில் குழாய்களில் தண்ணீர் வராமல் இருப்பதால் பலரும் ‘ கேன் வாட்டரை ‘ பயன்படுத்தி வருகின்றனர். ஒரு கேன் வாட்டரை பயன்படுத்தினால் மற்றொரு முறை பயன்படுத்தும் போது வெந்நீரால் சுத்தம் செய்துவிட்டு கேன் வாட்டரை நிரப்ப வேண்டும். ஆனால் இங்கு அப்படியா நடக்கிறது இல்லை பல நிறுவனங்களில் கேன் வாட்டரை சுத்தம் செய்யாமல் அனுப்பி வருகின்றனர்.மேலும் தண்ணீரை சுத்தம் செய்யும் போது தண்ணீரில் உள்ள சத்துக்கள் அழிந்து அந்த தண்ணீரை பருகுவதால் எந்த ஒரு பயனும் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆர் ஓ வாட்டர்

ஆர் ஓ வாட்டர் பல குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர். நீரில் உள்ள மாசுக்களை அழிப்பதாக நினைத்து நீர் உள்ள சத்துக்களையும் சேர்த்து அழித்து வருகிறது அந்த ஆர் ஓ கருவி. ஆனால் அது தெரியாமல் பல குடும்பங்கள் அந்த தண்ணீரை பருகி வருகின்றன.

தற்போது மருத்துவர்கள் கேன் வாட்டர் மற்றும் ஆர் ஓ வாட்டர் மூலம் நீரில் உள்ள தாதுப் சத்துக்கள் அழிக்கிறது அதனால் ‘ உடல் சோர்வு ’ ‘ தசைப்பிடிப்பு ’ ‘ உடல் வலுவலுப்பு ’ போன்ற நோய்கள் வரும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a Comment