புலிக்குப் பிறந்து பூனை ஆகுமா? மிரட்ட வரப்போகும் ஜேசன் சஞ்சயின் பக்காவான கூட்டணி!

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக விஜய் இருக்கும் நிலையில், அவர் அரசியலில் ஈடுபடவுள்ளதால் அவரது இடத்திற்கான போட்டி நடந்து வருகிறது. யார் அடுத்து விஜய்யின் இடத்தைப் பிடிப்பது என்ற போட்டி முன்னணி நடிகர்களுக்கிடையில் நடந்து வர, விஜய் அதைப்பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தன் வேலையைப் பார்த்து வருகிறார்.

ஆனால், விஜய் இத்தனை ஆண்டுகள் செல்வாக்கு செலுத்தி வரும் சினிமாத்துறையில் அவர் நினைத்திருந்தால், தன்னை தன் தந்தை எஸ்.ஏ,சந்திரசேகர் நாளைய தீர்ப்பு என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்ததுபோல் சினிமா படிப்பு முடித்து, பக்கா சினி மெட்ரீயலாக உருவாகியுள்ள தன் மகன் ஜேசன் சஞ்சயையும் அவர் ஒரு ஹீரோவாக அறிமுகம் செய்திருக்கலாம்…. பிரபல இயக்குனரின் படத்திலேயே.

ஆனால், வாரிசு என்ற முத்திரை தனக்கு குத்தப்பட்டு, எளிதாக சினிமாவில் நுழைந்தவர் என்ற பெயர் தனக்குக் கிடைத்ததுபோல் தன் மகனுக்கும் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இத்தனை ஆண்டுகள் தன் மகனை 24 ஆண்டுகளாக பொத்திப் பொத்தி வளர்த்து, தற்போது அவரது சொந்த முயற்சியிலேயே படம் இயக்கப் பச்சை கொடி காட்டியுள்ளார் விஜய்.

அதன்படி, லைகா தயாரிப்பில் விஜய் மகன் சஞ்சய் ஒரு படம் இயக்கவிருப்பதாக கடந்தாண்டு அதிகாரப்பூர்வ தகவல் வெளியான நிலையில், இதில் யார் நடிக்கப் போகிறார்கள்? யார் இசையமைப்பது என்ற சர்ச்சைகள் எல்லாம் மீடியாவில் பரவிக் கொண்டே இருந்தன. ஆனால் படம் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியான பாடில்லை.

இந்த நிலையில்,லைகா சுபாஸ்கரன் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்தில், சுதீப் கிஷன் ஹீரோவாக நடிக்கவுள்ளாதகவும், இப்படத்திற்கும் எஸ். தமன் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே எதிர்பார்பு உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில் விஜய் மகனின் புதிய படம் கிரிக்கெட் பற்றிய கதை என உலா வருகிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து, சென்னை -28, சமீபத்தில் வந்த லப்பர் பந்து ஆகிய படங்கள் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், இப்படமும் சஞ்சய் முத்திரை பதிக்கதக்க ஏற்றது எனவும் இது ரசிகர்களைக் கவரும் என்று கூறப்படுகிறது.

இதுவரை குறும்படம் மட்டுமே இயக்கிய ஜேசன் சஞ்சய் இப்படம் மூலம் தன்னை இயக்குனராக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும் தன் தாத்தா தந்தையின் மரியாதையையும் புகழையும் பெரிய பட்ஜெட்டை முதலாகப் போடும் லைகாவுக்கு வருமானத்தையும் ஈட்டித்தர வேண்டிய பொறுப்புக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News