Sports | விளையாட்டு
வியந்து பார்த்த ஆஸ்திரேலிய வீரர்.. தன்னம்பிக்கை ஊட்டிய இந்திய வீரரின் மகிழ்ச்சியான தருணம்!
ஆஸ்திரேலிய அணியில் அறிமுகம் ஆன இளம் வீரர் கேமரான் கிரீன், இந்திய வீரர் ஒருவரை புகழ்ந்து இருக்கிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது இந்த போட்டியில் அறிமுகமானவர்தான் ஆல்ரவுண்டர் கேமரான் கிரீன்.
அவர் முதலில் பந்துவீச்சில் சற்று மந்தமாக செயல்பட்டார். 4 ஓவர்களில் 27 ரன்களை விட்டுக் கொடுத்தார். விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. அடுத்ததாக இந்திய அணி நிர்ணயித்த 303 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி ஆடிய போது பேட்டிங் செய்ய வந்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு 186 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்திற்கு வந்தார். மிகவும் பதற்றமாக காணப்பட்டார்.அவர் அதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் ஏழாம் வரிசைக்கு மேலே பேட்டிங் செய்ததில்லை.
முதன் முதலாக தான் ஆடிய சர்வதேச போட்டியில் அணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டார். அப்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் அவருக்கு பின்னே நின்று இருந்தார்.
அவர் பதற்றமாக இருப்பதை கண்ட கே எல் ராகுல் அவரிடம், பதட்டப்படாதீர்கள் இது உங்களுக்கான நேரம் “ஆல் த பெஸ்ட்” என்று கூறியுள்ளார்.
மேலும், ராகுல் கூறிய வார்த்தைகளால் தான் வியந்து போனதாகவும், இதை தான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் என்றும் கூறி நெகிழ்ச்சி அடைந்துள்ளார் கேமரான் கிரீன். இந்தப் போட்டியில் கிரீன் 27 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார்.

Kl-Rahul-Cinemapettai.jpg
