வேலைக்காரன்

தனி ஒருவன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில், ராம்ஜியின் ஒளிப்பதிவில்  சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் வேலைக்காரன் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள நடிகர் பகத் ஃபாஸில் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் 22ஆம்  வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது, மேலும் டிக்கெட் புக்கிங்கும் தொடங்கி விட்டது. இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி இப்படம் பற்றி பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார் ..

“இதுவரை சிவகார்த்திகேயன் இப்படி ஒரு படத்தில் நடித்ததில்லை. இந்தப் படத்தில் அவரின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம். அவர் மூன்று விதமான பரிணாமங்களில் தோன்றுவார். அதற்கேற்ப அவரின் தோற்றத்தையும் காட்சிகளையும் உருவாக்கியுள்ளோம்.

சென்னை வெள்ளத்தின் போது ‘வேலைக்காரன்’ படத்தின் ஒரு வரிக் கதையை எனக்கு சொன்னார் மோகன் ராஜா. அவர் சொன்ன அந்த கான்செப்ட் என்னைக் கவர்ந்தது, இந்தப் படம் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவரிடம் உறுதி அளித்தேன். ‘வேலைக்காரன்’ வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமா, வருங்காலத் தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான படம்.” என்று கூறியுள்ளார் ராம்ஜி .