Connect with us

Cinemapettai

pc-sreeram

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கைதி படத்தை பார்த்து வியந்து லோகேஷ் கனகராஜை வாழ்த்திய பி.சி. ஸ்ரீராம்! மன்னிப்பும் கேட்டார்

கைதி படம் வெளியான ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு, பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், கார்த்தி நடித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜின் தீவிர திரில்லர் படமான ‘கைதி’ படத்தை பார்த்து பாராட்டிஇருக்கிறார்.

‘கைதி’ திரைப்படம் சீட்டின் நுனிக்கே சென்று பார்க்கும் அனுபவத்தை தந்ததாகவும் வியப்புடன் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் தாமதமாக கைதி படத்தை பார்த்ததற்காக மன்னிப்பும் கோருவதாகவும் பி.சி. ஸ்ரீராம் கூறியுள்ளார்.

இதேபோல் பி.சி. ஸ்ரீராம், லோகேஷ் கனகராஜை வாழ்த்தியுள்ளதுடன், படத்தின் நடிகர் கார்த்தியையும் பாராட்டி உள்ளார். இரவு காட்சிகளை சிறப்பாக படமாக்கிய கேமராமேன் சத்யன் சூரியனையும் பி.சி. ஸ்ரீராம் வெகுவாக பாராட்டி உள்ளார்.

நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படத்துடன் தீபாவளியன்று கைதி திரைப்படம் வெளியிடப்பட்டது. இதில் கார்த்தி, நரேன் மற்றும் தீனா ஆகியோர் முக்கியவேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து இருந்தார்.

லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய்யின் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top