fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஜியோ வருகையின் எதிரொலி.. பதறிபோய் கேபிள் டிவி கட்டணத்தை குறைத்தனர்.. இனி எவளோ தெரியுமா?

jio-cable-tv

India | இந்தியா

ஜியோ வருகையின் எதிரொலி.. பதறிபோய் கேபிள் டிவி கட்டணத்தை குறைத்தனர்.. இனி எவளோ தெரியுமா?

தமிழ் கேபிள் டிவி சேனல்கள் மற்றும் டிடிஹச் தனியார் துறைகளுக்கும், மாநில அரசிற்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டு மாதம் 70 ரூபாய் என்று இருந்தது.

ஆனால் பின்பு வந்த அதிமுக ஆட்சியில் ‘ஹச் டி’ செட்டாப் பாக்ஸ் மாற்றப்பட்டு வாடிக்கையாளர்களிடம் ரூ.200 வரை வசூலிக்கப்பட்டது. இதனை சட்டசபையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் எடுத்துரைத்துள்ளார்.

இதற்கு அதிரடியாக பதில் அளிக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த கட்டணத்தை தற்போது ரூபாய் 130 ஆக குறைத்துள்ளார். இதில் ‘ஜி எஸ் டி’ அடங்கும் என்று தெரிவித்துள்ளனர். இந்த கட்டணம் விரைவில் அமலுக்கு வரும் இதன் மூலம் 600க்கும் மேற்பட்ட சேனல்களை பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

காரணம் இதுமட்டுமில்லை, ஜியோ வருகையும்தான். ஜியோ வந்தவுடன் பல கம்பெனிகளுக்கு மூடுவிழா நடந்துவிடும். இப்பொழுது வரவிருக்கும் ஜியோ முதல் ஆறு மாதம் இலவச சேவை வழங்க உள்ளதாக செய்திகள் பரவியுள்ளது. இதனை கருதி கொண்டு அரசு குறைத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top