Connect with us

Cinemapettai

amazon-rainforest

India | இந்தியா

இயற்கையாகவே தன்னை காப்பாற்றிக் கொண்ட அமேசான் காடு.. மகிழ்ச்சியில் உலக நாடுகள்..

உலகில் 20% மழையை கொடுப்பதன் மூலம் அமேசான் காடு மக்களுக்கு பல உயிரினங்களையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் பரவிய காட்டுத்தீயினால் அமேசான்  காட்டில் உள்ள மரங்கள் மட்டும் உயிரினங்கள் அழிந்து போயின.

ஆனாலும் ராணுவத்தின் முழு முயற்சியால் மற்றும்  பராகுவே, பெரு, கனடா போன்ற போன்ற நாடுகளின் உதவியால் தீயை அணைப்பதற்கு முயற்சி செய்து வந்தனர். ஆனால் பல ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தீ பரவியதால் அவர்களால் மரங்கள் கருகி நிற்கும் நிலையை நான் பார்க்க முடிந்தது.

பல உயிரினங்கள் இதில் அழிந்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்டு 23ம் தேதி முதல் மழை பெய்து வருவதால் அமேசான் காடு தற்போது இயற்கையாகவே காப்பாற்றப்பட்டு உள்ளது. சுமார் 4 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததால் காட்டுத் தீ இயற்கையாகவே அணைக்கப்பட்டு இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் சமூக ஆர்வலர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

அந்த காட்டில் வாழும் மக்கள் மழை வருவதற்கான பூஜை நடத்தியதால் மட்டுமே இயற்கையாக தீயை அணைக்க முடிந்ததாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. என்னதான் ராணுவம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் முன்னேறினாலும் இயற்கைக்கு முன்னாடி ஒன்றுமே இல்லை என்பதை இந்த நிகழ்வு நமக்கு உலக அளவில் நிரூபித்து விட்டது.

amazon

amazon

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top