ஆஸ்திரேலிய இந்தியா போட்டி விரைவில் ஆரம்பம்மாகிறது இதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்துகொண்டு இருகின்றனர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்மித், வார்னரை விரைவாக அவுட்டாக்க, மாஸ்டர் பிளானுடன் ரெடியாக இருப்பதாக முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு எதிராக 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, வரும் 17ல் சென்னையில் துவங்கவுள்ளது.

இதில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை அவுட்டாக மாஸ்டர் பிளான் ரெடியாக இருப்பதாக முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷமி கூறுகையில்,’ ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஒவ்வொரு வீரக்கு எதிராகவும் தனிப்பட்ட திட்டம் வைத்துள்ளோம். அதை பீல்டிங்கிங் போது சரியாக அமல்ப்படுத்துவதே இலக்கு. எனது சொந்தமண்ணில் நாட்டுக்காக சாதிக்க கிடைத்துள்ள பெருமையை சரியாக பயன்படுத்துவேன். இலங்கை அணியை விட ஆஸ்திரேலியா பலமான அணி, அதனால் தொடரை முழுமையாக கைப்பற்றுவது கடினம். ஆனால் முடியாத விஷயமல்ல.’ என்றார்.