Connect with us

Cinemapettai

விஜய்யை சுற்றியிருக்கும் வியாபாரிகள்.. தப்புவாரா தளபதி

vijay-smoking

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யை சுற்றியிருக்கும் வியாபாரிகள்.. தப்புவாரா தளபதி

தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்கு புத்தாண்டு வெளியீடாக வரவிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் அடுத்த வருடத்தை தளபதியுடன் சேர்ந்து தொடங்க இருப்பதை நினைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்திய அளவில் ட்ரெண்டிங் கொண்டுவரப்பட்ட 6 மணிக்கு வெளியான இந்த செய்தியின் எதிர்பார்ப்பு ரசிகர்களை அதிர்ச்சியாக உள்ளது. படத்தின் டைட்டில் வெளிவரும் என்று எதிர்பார்த்தது. ஆனால் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் என்ன கொடுமை என்றால் இந்த செய்தியை வெளியிட ரசிகர்களை காக்க வைத்ததுதான். பர்ஸ்ட் லுக் வரப்போகிறது என்பதை கூறுவதில் தவறில்லை. ஏதோ டிசைன் வேலை செய்து கொண்டிருகிறார்கள் விரைவில் வர போகிறது என்று நினைத்து கொள்ளலாம். ஆனால் சொன்ன நேரம்தான் தவறு. பர்ஸ்ட் லுக் எப்போ வெளிவர போகிறது என்பது இயக்குனருக்கு தயாரிப்பாளருக்கு முன்னாடியே  தெரியாதா? இதை காலையில் கூறினால் என்ன?.

thalapathi-64-first-look

thalapathi-64-first-look

எதற்காக வேலை வெட்டியை விட்டு ரசிகர்களை பல மணி நேரம் காத்திருக்க வைக்க வேண்டும். இதே கொடுமைதான் பிகில் படத்திற்கும் அர்ச்சனா கல்பாத்தி அநியாயம் பண்ணினார். கேட்டால் மார்க்கெட்டிங். இவர்கள் வியாபாரத்திற்கு விஜய் பெயரை கெடுக்கவே தயாரிப்பாளரும் இயக்குனரும் உள்ளனர் போல. உண்மையில் விஜய் படத்திற்கெல்லாம் மார்க்கெட்டிங் தேவையே இல்லை.

நேரடியாக விஜய் படத்தை ரிலீஸ் செய்தாலும் அது அன்று உலகளவில் ட்ரென்ட் தான். ஆனால் இவர்களுக்கு அந்த வியாபாரம் மட்டும் போதாது. நம் நேரத்தையும் காசாக்க வேண்டும் அதான் வியாபாரி. அடுத்து முதல் பர்ஸ்ட் லுக் என்று முதல் நாள் விடுவார்கள் பின்பு 12 மணிக்கு இரண்டாவது லுக் விட்டு நம் இரண்டு கண்களையும் மூட விட மாட்டார்கள். வாழ்க தமிழ் சினிமா முதலாளிகள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top