Connect with us
Cinemapettai

Cinemapettai

govt-bus-accident

Tamil Nadu | தமிழ் நாடு

அரசு பேருந்தின் அசுர வேகம்.. டயர் வெடித்து மரத்தில் மோதியது.. பயணிகள் நிலைமை என்ன?

திருவண்ணாமலையில் 35 பயணிகளுடன் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. பஸ்சில் பயணம் செய்தவர்களுக்கு படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை அருகே 35 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து ஒன்று ஆண்டாப்பட்டு அருகே சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென்று பேருந்து முன்பக்க டயர் திடீரென்று பழுதடைந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அங்கிருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் விரைந்து பயணிகளை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரிதும் ரிப்பேர் ஆன பஸ்ஸை ஓட்டுனருக்கு வழங்கபடுவதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன.

இரண்டு நாளுக்கு முன்னர்தான் ஒரு அரசு பேருந்தின் மேற்கூரை பிய்த்து கொண்டு போனது. அதிஷ்டவசமாக ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அரசு இதனை கருத்தில் கொண்டு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய பேருந்துகள் அனைத்தையும் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top