Connect with us

Cinemapettai

சிறுவண்டு இல்ல பாஸ், ராட்சச ராஜாளி. பம்பில்பீ (bumblebee) – திரைவிமர்சனம் .

Reviews | விமர்சனங்கள்

சிறுவண்டு இல்ல பாஸ், ராட்சச ராஜாளி. பம்பில்பீ (bumblebee) – திரைவிமர்சனம் .

ட்ரான்ஸ்பார்மர்ஸ்

தயாரிப்பாளரும், இயக்குனருமான மைக்கேல் பே அவர்களின் ப்ரயின் சாய்லட் இப்பட வரிசை. இதுவரை அவர் இயக்கத்தில் ஐந்து படங்கள் வந்துள்ளது. வேற்று கிரகம் ஒன்றில் இருக்கும் இயந்திர மனிதர்களின் யுத்தம் பூமிக்கு இழுத்துவரப்பட்டு, அதன் பின் அவர்கள் மனிதர்களுடன் இணைந்து இருப்பதே மையக்கதை.

இந்த பட வரிசையின் ஆறாம் பாகம் தான் இந்த பம்பில்பீ. டிராவிஸ் நயீட் படத்தை இயக்கியுள்ளார். 2007 இல் வெளியான ட்ரான்ஸ்பார்மர்ஸ் முதல் பாகத்துக்கு முந்தையகாலத்தில் நடக்கும் கதை இது.

பம்பில்பீ

Bumblebee

சைபர்ட்ரானில் சண்டை முற்றுகிறது, எதிர்க்கமுடியாத சூழ்நிலையில் ஆப்டிமஸ் பிரயம் தலைமயில் உள்ள ஆட்டோ பாட்ஸ் பின் வாங்குகிறது. பி – 127 என்பவனை பூமிக்கு செல்லுமாறு உத்தரவிடுகிறது. மற்றவர்களும் விரைவில் அங்கு வருவோம் என சத்தியமும் செய்கிறான் ஆப்டிமஸ்.

பூமியில் 1987 ஆம் ஆண்டு மிலிட்டரி ப்ராக்டிஸ் இடத்தில் வருகிறான் அவன். ஒருபுறம் மிலிட்டரி அவனை தேட, மறுபுறம் அவனை அழிக்க, மற்ற தகவல்களை பெற இரண்டு டிசெப்டிகான்ஸ் பூமி வந்தடைகின்றன.

பீட்டல் கார் வடிவில் இருக்கும் அவனை, சார்லி தன வசமாக்குகிறாள். பம்பில்பீ என பெயர் சூட்டுகிறாள். அவன் சுயரூபம் பார்த்து பயமாகாமல், இருவரும் நெருக்கம் அடைகின்றனர். அவனை சரி செய்வது, வீட்டில் அம்மாவிடம் திட்டு வாங்குவது, இறந்த தன் அப்பாவின் நினைவில் வாடுவது, காதல், தம்பியுடன் குறும்பு என்று செல்கிறது படம்.

டிசெப்டிகான்ஸ் அரசாங்கத்தின் உதவியுடன், அவனை தேட பட விறுவிறுப்பாகிறது. பீக்கு தன் நினைவு திரும்ப, ஒருபுறம் ஹீரோயினின் அன்புக்கு அடிபணிவது, மறுபுறம் டிசெப்டிகான்ஸ் இருவரையும் அழிப்பது என்று நகர்கிறது கதை.

Bumblebee

சினிமாபேட்டை அலசல்

ட்ரான்ஸ்பார்மர்ஸ் ரசிகர்களுக்கு இப்படம் சூப்பர் ட்ரீட் தான். புதிதாக இந்த சீரிஸை பார்ப்பவர்களுக்கும் நல்ல அறிமுகத்தை கொடுக்கும் இப்படம். அசத்தல் க்ராப்கிஸ், சண்டை காட்சிகள், மெரசல் பின்னணி இசை, விறுவிறு திரைக்கதை, செண்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என மொத்த பேக்கேஜ் இப்படம்.

herbie

பல இடங்களில் பம்பில்பீயின் காட்சிகள் நமக்கு ஹெர்பி தி கார் படத்தை நினைவு படுத்துகின்றது. அதே சமயத்தில் ஹீரோயினுக்கும் பீக்கும் இடையேயான உறவு காங் படத்தையும் ஞாபகம் படுத்துகிறது.

kong-skull-island

சினிமாபேட்டை வெர்டிக்ட்

கடந்த சில ட்ரான்ஸ்பார்மர்ஸ் படங்கள் எதிர்மறை விமர்சனத்தை பெற்று வந்த நிலையில், இந்த பாகம் அனைவரின் பாராட்டையும் பெரும். எளிதில் நம்மால் அடுத்த என்ன நடக்கும் என்று யூகிக்க முடிந்தாலும், மேக்கிங்கில் அசத்திவிட்டது இந்த டீம்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 3.25 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top