Tamil Cinema News | சினிமா செய்திகள்
கொழுக் மொழுக் நடிகையின் பரிதாப நிலை.. பட வாய்ப்பு இல்லாததால் பழைய காதலனுடன் தஞ்சம்
நடிக்க வந்த புதிதிலேயே தன்னுடைய கொழுக் மொழுக் தேகத்தினால் ரசிகர்களை தாறுமாறாக கட்டிப்போட்டவர் தான் அந்த பிரபல நடிகை. பழம்பெரும் நடிகை ஒருவரின் மறுபிறவி என்று கூட பேசினார்கள். அந்த அளவு தக்காளிப் பழம்போல் தகதகவென இருந்தார்.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார் அந்த நாயகி. நடிக்க வரவில்லை என்றாலும் அழகாக இருக்கிறார் என்பதற்காகவே அள்ளிப் போட்டுக் கொண்டார்கள் நமது நடிகர்கள்.
ஏற்கனவே காதலில் தோல்வியடைந்த முன்னணி நடிகர் ஒருவருடன் ஒரே ஒரு படத்தில் நடித்தபோது காதல் வயப்பட்டார் அந்த நாயகி. அதன் பிறகு அந்த நாயகியின் அம்மா நடிகரிடம் கெஞ்சி கூத்தாடி தன்னுடைய பெண்ணை விட்டுவிடுமாறு கேட்டதும் நம்ம நடிகர் விட்டுக் கொடுத்துவிட்டார்.
அதற்கு காரணம் தமிழ் சினிமாவில் அனைவரும் அந்த நடிகரைப் பற்றி தப்பு தப்பாக கூறியது தானாம். அது மட்டுமல்லாமல் தற்போது முன்னணியில் இருக்கும் நாயகி ஒருவரின் முன்னாள் காதலரான அவர் அந்த நாயகியுடன் செய்த சில்மிஷங்களால் எல்லாம் போட்டு இந்த நடிகையின் அம்மாவிடம் போட்டு கொடுத்துவிட்டார்கள் நம்ம கோலிவுட் வாசிகள்.
அதனால் அந்த நடிகர் இருவரையும் மறக்க எண்ணி எந்நேரமும் ராஜபோதையில் இருந்துள்ளார். அதனால் படங்களில் கூட நடிக்காமல் தனது கவனத்தை திசை திருப்பினார். ஆனால் சமீப காலமாக அந்த நடிகர் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏன் இந்த மாறுபாடு என்று கேட்டால் எல்லாம் என் ரசிகர்களுக்காகவே என்று தமிழ் சினிமாவை தெறிக்க விடுகிறார்.
தற்போது புதிய இயக்குனர்கள் முதல் முன்னணி இயக்குனர்கள் வரை அந்த பிரபல நடிகரை வைத்து படம் இயக்க ஆசைபடுகிறார்கள். அப்படி இருக்கையில் தனது பழைய காதலி ஒருவருடன் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒரு படத்தில் கமிட்டானார் அந்த நடிகர்.
நடிகர் என்னமோ நட்பு ரீதியில் தான் அந்த நாயகியுடன் மீண்டும் பழகியுள்ளார். ஆனால் தனக்கு பட வாய்ப்பு இல்லாத காரணத்தினாலும் யாரும் தன்னை பார்ட்டியில் கூட சேர்த்துக்கொள்ள வில்லை என்று ஆதங்கத்தில் தான் தற்போது மீண்டும் தனது பழைய காதலருடன் கைகோர்த்துள்ளாராம்.
இந்த வாட்டி காதல் கைகூடினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். நாயகி தற்போது அம்மாவின் பேச்சை துளி கூட கேட்பதில்லை யாம். அதுமட்டுமல்லாமல் உன் பேச்சை நம்பி எனது காதலை விட்டது போதும் என அம்மாவிடமே எதிர்த்து பேசிவிட்டு அந்த நடிகர் தான் உலகம் என சுற்றி சுற்றி வருகிறாராம்.
