ஜியோவின் அதிரடி திட்டத்தால் அனைத்து நெட்வொர்க்ம் முடங்கியது இதனால் பிஎஸ்என்எல்  அதிரடி திட்டம் கொண்டுவரவுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 5ஜி சேவையை விரைவில் அளிக்கப்போகிறது என்றும் அதற்கான ஆயத்தப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என்றும் அந்நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா கூறியுள்ளார்.

5ஜி சேவையைத் தொடங்க நோக்கியா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. சேவையைத் தொடங்குவதற்குத் தேவையானவற்றை தயார் செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லார்சென் & டூபுரோ மற்றும் எச்.பி. நிறுவனங்களிடம் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 5ஜி தொழில்நுட்பம் குறித்து கோரியண்ட் நிறுவனத்தின் ஆலோசனையையும் பிஎஸ்என்எல் பெற்றிருக்கிறது .

இந்த ஆண்டுக்குள் ஆயத்தப்பணிகள் தொடங்கும் பட்சத்தில் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிஎஸ்என்ஸ் 5ஜி சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.