Bs3_cinemapettai

அதிக மாசுள்ள புகையை வெளியிடும் பிஎஸ்-3 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் விற்பனைக்கு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் தடை விதித்து மார்ச் 29-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இரண்டே நாட்களுக்குள்  அதிரடியான தள்ளுபடிகளை வழங்கி பெரும்பாலான பிஎஸ்-3 வாகனங்களை விற்பனை நிறுவனங்கள் விற்றுத் தீர்த்தன.

ஆனால், ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனப் பதிவுக்கான ஆன்லைன் படிவத்தில் பிஎஸ்-3 வாகனங்களை சேர்க்கும் வசதி தரப்படாததால் தற்காலிமாக அந்த வாகனங்களின் பதிவு நிறுத்தப்பட்டது.

அதிகம் படித்தவை:  நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும் படம் பரியேறும் பெருமாள். வைரலாகுது சிவகார்த்திகேயன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் .

இதனால் தமிழகம் முழுவதும் 41,000 வாகனக்கள் தேங்கியுள்ளன.
இந்நிலையில், மார்ச் 31 வரை விற்பனை செய்யப்பட்ட பிஎஸ்-3 வாகனங்களை பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து இதுதொடர்பான ஆணை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், பிஎஸ்-3 வாகனங்களை பதிவு செய்யும் படிவம் 20-ஐ பதிவேற்றவும் வரி செலுத்தவும் ஆன்லைனில் வசதிகள் இல்லை. எனவே இந்த வாகனங்களை தணிக்கை செய்ய தனியாக நோட்டு பராமரிக்குமாறும் பிஎஸ்-3 வாகனங்களின் விற்பனை படிவம், காப்பீட்டு சான்றுகள் ஆகியவற்றை அந்த புதிய நோட்டில் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  பொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களின் கண்களை குளிரவைத்த வாணி கபூர்.!

இதனால் மார்ச் மாதத்தில் பிஎஸ்-3 வாகனங்களை வாங்கிவிட்டு பதிவு செய்ய முடியாமல் தவித்தவர்களுக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டது.