தமிழ் சினிமாவில் தனக்கென தனி மாஸ் ரசிகர்களை வைத்திருப்பவர் அஜித். தல என்றழைக்கப்படும் இவரைப்பற்றி அடிக்கடி திரையுலக பிரபலங்கள் தாங்கள் அவரின் ரசிகர்கள் என்று கூறுவதுண்டு.

ஆனால் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான புருனே நாட்டு இளவரசியும் அஜித்தின் ரசிகையாக மாறியுள்ளாராம்.

ஆடம்பர மாளிகையில் வாழும் இவரது அரண்மனையில் வெளிநாட்டு வைர முதலாளிகளுக்கான விருந்து நிகழ்ச்சி ஒன்றில் ஆலுமோ டோலுமா பாடல் இசைக்கப்பட்டு பலரும் உற்சாகமாக நடனமாடினார்களாம்.

இந்த பாடலை கேட்டு ரசித்த புருனே இளவரசி அங்குள்ளவர்கள் மூலம் அதில் நடித்த அஜித்தின் விபரம், புகைப்படங்கள், நடித்த படங்கள் பற்றியெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டாராம்.

அஜித்தின் அழகு, கம்பீரம் போன்றவை பிடித்துள்ளதால் அவரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் கூறியுள்ளாராம்.