பிரூஸ் வில்லிஸ், தற்ப்பொழுது 62 வயதாகிறது இவருக்கு. நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என்று பன்முகக் கலைஞன் இவர். மேடை நாடகங்களில் ஆரம்பித்து, பின் டிவி யில் நுழைந்து, இறுதியாக வெள்ளித்திரையில் முத்திரை பத்தித்தவர். ஆக்ஷன் படங்கள் மட்டுமின்றி, சென்டிமென்ட், ரொமான்ஸ், திரில்லர் என்று அனைத்து ஜானர்களிலும் நடித்தவர். இதுவரை 60 படங்களுக்கு மேல் நடித்தவர். இவர் நடிப்பில் உருவான சில பிரபலாமன படங்களின் லிஸ்ட் இது தான் Die Hard series ,12 Monkeys (1995), The Fifth Element (1997), Armageddon (1998), Unbreakable (2000),  Lucky Number Slevin (2006), Red (2010), Moonrise Kingdom (2012), The Expendables 2 (2012), Looper (2012), The Sixth Sense (1999),Sin City (2005).

இவ்வளவு படங்களில் நடித்திருந்தாலும் டை ஹார்ட் படம் தான் இவரின் சினிமா வாழ்விற்கு திருப்பு முனையாக அமைந்த படம். இதன் முதல் பாகம் 1988ல் வெளிவந்தது, மற்றும் இதன் ஐந்தாம் பாகம் கடந்த 2013 ஆம் ஆண்டு வந்தது. தனி ஒரு போலீஸ் அதிகாரியாக நின்று, எதிரிகளை வைச்சு செய்யும் ஜான் மெக்கலேன் கதாபாத்திரத்தில் இவர் அசத்தி இருப்பார்.

இவர் முன்பு 2010 ல்  வழங்கிய பேட்டியில்,  டை ஹார்ட் படத்தில் ஆறாம் பாகம் வரை நடிப்பேன் என்று கூறி இருந்தார். அதை இப்பொழுது நிறைவேற்றும் விதமாக இந்த சீரிஸின் புது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இது கடைசி பாகம் என்பதால் மிகுந்த பொருட்ட்ச்செலவில் தயாராக உள்ளது. படத்தின் கதை இரண்டு டைம் லைனில் நகருமாம். ஒன்று தற்ப்பொழுது நடப்பது போலவும் அதில் ஜான் மெக்லேனாக, பிரூஸ் வில்லிஸ் நடிப்பார் என்றும். மற்றோன்று 1970 களில் நடப்பது போலவும் கதை உள்ளதாம்,  அதில் இளம் வயது ஜான் மெக்லேனாக நடிக்கப் போவது யார் என்று இன்னும் முடிவாக வில்லையாம். எது எப்படியோ ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஆக்ஷன் பிளாக் நிறைந்த படம் 2018 ல் ரிலீசாகப் போவது என்னவோ உறுதியாகிவிட்டது.

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்:

மனோஜ் ஷ்யாமளான் இயக்கத்தில் பிரூஸ் வில்லிஸ், சாமுவேல் ஜாக்க்ஸனுடன் நடித்த ”தி அன்பரீக்கபில்” (Unbreakable) படத்தின் அடுத்த பாகத்திலும் நடிப்பதும் உறுதி ஆகி உள்ளது. இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த வயோதிகர்கள் இருவரும், ஸ்ப்ளிட் படத்தில் (split2013) வரும் பீஸ்ட் என்ற கதாபாத்திரத்துடன் நேருக்கு நேர் மோதப்போகிறார்கள். இப்படத்திற்கு கிளாஸ்(Glass) என்று பெயர் வைத்துள்ளார் மனோஜ் ஷ்யாமளான்.