30 நாட்களில் வளர்க்கப்பட்டு கடைகளுக்கு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி,  வளர்வதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதன் உணவுகளில் கலந்து கொடுக்கப்படுகிறது.

பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கு பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

பெண்கள் பிராய்லர் கோழியை சாப்பிடுவதால், குறைந்த வயதில்  பருவம் அடைகின்றனர். மாதவிடாய் நேரங்கள் சரியாக வருவதில்லை. அதாவது குறிப்பிட்ட கால அளவுக்குள் சரியாக வருவது கிடையாது.

இதனால் பல்வேறு வகையான உடல் உபாதைகளை பெண்கள் சந்திக்க வேண்டி உள்ளது. மிகக்குறைந்த வயதிலேயே கர்ப்பப்பை பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

அதேபோல் ஆண்கள் பிராய்லர் கோழியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுகிறது. எனவே முடிந்த அளவுக்கு பிராய்லர் கோழியை சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு நாட்டு கோழி, அல்லது மீன், ஆட்டிறைச்சி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.