பணக்கார ரெஸ்லிங் வீரர்கள் பட்டியல்: #BrockLesnar முதலிடம்.. #JohnCena 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்! - Cinemapettai
Connect with us

Cinemapettai

பணக்கார ரெஸ்லிங் வீரர்கள் பட்டியல்: #BrockLesnar முதலிடம்.. #JohnCena 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்!

News | செய்திகள்

பணக்கார ரெஸ்லிங் வீரர்கள் பட்டியல்: #BrockLesnar முதலிடம்.. #JohnCena 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்!

#WWE எனப்படும் பொழுதுபோக்கு மல்யுத்த விளையாட்டுப் போட்டிகளில் விளையாடும் வீரர்களில், அதிக வருமானம் ஈட்டுவோர் பட்டியலில் பிராக் லெஸ்னர் முதலிடம் பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் அதிக வருமானம் ஈட்டுவோரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதன்படி, 2016ம் ஆண்டில் அதிகம் சம்பாதித்த ரெஸ்லிங் வீரர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில், கடந்த சில ஆண்டுகளாக, முதலிடத்தில் இருந்துவந்த ஜான் சீனா இந்த முறை, 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதன்படி, 2016ம் ஆண்டில் அதிகம் சம்பாதித்த ரெஸ்லிங் வீரர்களின் விவரம் பற்றி பார்க்கலாம்.

முதலிடத்திற்கு முன்னேறியுள்ள #BrockLesnar 2016ம் ஆண்டில் 12 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டியுள்ளார். அதேசமயம், இவர் சென்ற ஆண்டில் ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கியதால், கணிசமான அபராதமும் செலுத்தினார்.

இரண்டாம் இடத்தில் உள்ள #JohnCena வருமானம் 8 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். அவர் சென்ற ஆண்டில் மிகக்குறைந்த ரெஸ்லிங் போட்டிகளில்தான் பங்கேற்றார். இதுவே வருமானம் குறைய காரணமாகும்.

#TripleH 3வது இடத்தில் உள்ளார். இவர் #WWE நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் ஆவார். இருந்தாலும், சென்ற ஆண்டு கணிசமான ரெஸ்லிங் போட்டிகளில் பங்கேற்றதன் மூலமாக, 3.8 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை இவர் ஈட்டியுள்ளார்.

4ம் இடத்தில் #RomanReigns, 5வது இடத்தில் #DeanAmbrose ஆகியோர் உள்ளனர். இதேபோன்று, #AJStyles, #ShaneMcmahon, #TheUndertaker, #SethRollins, #RandyOrton உள்ளிட்ட வீரர்கள் முறையே, 6, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளதாக, ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top