Reviews | விமர்சனங்கள்
கலக்கலான காமெடி கலாட்டா- ப்ரோ டேடி விமர்சனம்
மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் மோகன் லால் மற்றும் பிரித்விராஜ் இணைந்துள்ள படம். இப்படத்தை இயக்குவதோடு மட்டுமன்றி பிரித்விராஜ், மோகன் லாலின் மகன் வேடத்திலும் நடித்துள்ளார். கொரானா பரவல் காலகட்டத்தில் அரசின் கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு எடுத்து முடிக்கப்பட்ட ப்ரொஜெக்ட்.
கதை மீனா – மோகன் லால் தம்பதியின் மகன் தான் பிரித்விராஜ். மோகன் லாலின் நெருங்கிய நண்பரின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷனுடன் பெங்களுருவில் லிவிங் டுகெதர் முறையில் வசித்து வருகிறார்.
இரண்டு குடும்பமும் இவர்களுக்கு திருமணம் செய்ய யோசிக்கும் பொழுது நம் ஹீரோ – ஹீரோயின் தட்டி கழிக்கின்றனர். இந்நிலையில் காதலி, கல்யாணி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிகிறது நம் நாயகனுக்கு. அதுமட்டுமன்றி தனது அம்மா மீனாவும் கர்ப்பம் என மோகன் லால் சொல்லி தெரியவருகிறது.
அப்பா – மகன் இருவரும் இணைந்து திட்டம் போடுகின்றனர். இறுதியில் பிரித்வி – கல்யாணி ஜோடி இணைந்ததா, மோகன் லால் – மீனா விஷயத்தை சுற்றமும், நட்பும் எப்படி ஏற்றுக்கொண்டனர் என்பதே மீதி கதை.
சினிமாபேட்டை அலசல் – பிரித்வி தனது முதல் படமான லூஸிபயர் மாஸ் ஆக்ஷன் படமாக இயக்கி இருந்தார். அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு காமெடி ஜானரில் கலக்கியுள்ளார். ஸ்டைலிஷ் மேக்கிங் படத்தின் ப்ளஸ். கதாபாத்திர தேர்வு அருமை, இசை மற்றும் ஒளிப்பதிவு கூடுதல் ப்ளஸ். என்ன தான் உயர்தட்டு மக்களாக கதாபாத்திரங்கள் இருக்கும் பட்சத்திலும் அதிகம் சரக்கு போடும் காட்சி வருகிறது இயக்குனராக தவிர்த்திருக்கலாம் பிரித்வி.
சினிமாபேட்டை வெர்டிக்ட் – 2018 இல் ஹிந்தியில் வெளியான “பதாய் ஹோ” படத்தின் இன்ஸபிரேஷன் தான் இந்த ப்ரோ டாடி. மேலும் படத்தின் சில இடங்களில் நமக்கு எஸ் ஜே சூர்யாவின் “நியூ” பட சாயலும் தெரிகிறது. எனினும் வீட்டில் ஹாயாக அமர்ந்து ஜாலியாக பார்க்க கூடிய பேமிலி காமெடி ட்ராமா தான் இந்த ப்ரோ டாடி.
சினிமாபேட்டை ரேட்டிங் 3 / 5
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
