மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியம் காய்கறிகள் மற்றும் பழங்கள் மிக முக்கிய பங்கு ஆற்றுகிறது. காய்கறிகளிலேயே மிகச்சிறந்த காய் கத்தரிக்காய், இது தக்காளிக்கு இணையான சத்துக்களை கொண்டுள்ளது.

இது பல பேருக்கு தெரியாது. அதன் காரணமாக பலர் கத்தரிக்காயை சாப்பிடாமல் ஒதுக்கி வைத்து விடுகின்றனர். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. பிஞ்சு கத்தரிக்காய் உடலுக்கு நல்ல சத்துக்களையும், வளத்தையும் அளிக்கிறது.

அதிகம் படித்தவை:  "டண்டணக்காவை" தொடர்ந்து ஜெயம் ரவிக்கு "டிஸ்கியான்" மீண்டும் ஒரு மாஸ் ஒபெநிங் சாங் - அடங்கமறு !

இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம் கார்போஹைட்ரேட், விட்டமின்கள் நிறைந்த சத்துக்கள் கத்தரிக்காயில் உள்ளது.

மருத்துவ குணங்கள்:

நாக்கில் ஏற்படுகின்ற அலர்ஜியை சரிசெய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.
சளி, பித்தம், தொண்டைக்கட்டு, ஈரல்நோய், கீல்வாதம், மலச்சிக்கல், கரகரப்பான குரல் உள்ள நோய்களை சரிசெய்கிறது.

அதிகம் படித்தவை:  சொடக்குமேல பாட்டிற்கு வெடுக் வெடுக் என இடுப்பை ஆட்டி குத்தாட்டம் போட்ட வணமகன் நடிகை சாயிஷா.!

பெருங்குடல் புற்று நோய், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.
மேலும், கத்தரிக்காய் உடம்புக்கு சூட்டை தரும் காய்கறி வகையை சார்ந்தது ஆகும். எனவே புண், சொறி சிரங்கு உள்ளவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இதனை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.