Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆக்ரோஷமான 11 ஓவர்கள்.! சிரித்துக்கொண்டே பெவிலியன் திரும்பி ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி!

India-Bowling-Cinemapettai.jpg

Sports | விளையாட்டு

ஆக்ரோஷமான 11 ஓவர்கள்.! சிரித்துக்கொண்டே பெவிலியன் திரும்பி ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இதில் டாஸில் வெற்றிபெற்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது ஆஸ்திரேலிய அணி.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்சில் 195 ரன்கள் எடுத்தது. இந்திய அணி அபாரமாக பந்து வீசி முதல் நாளில் அனைத்து விக்கெட்களையும் கைப்பற்றியது.

முக்கியமாக பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் இந்திய அணியின் அஸ்வின், பும்ரா, அறிமுக வீரர் சிராஜ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள். தொடக்கத்திலேயே அஸ்வின் 2 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. ஓப்பனிங் வீரர் மயங்க் அகர்வால் டக் அவுட் ஆனார். ஆனால் அதன்பின் புஜாரா, சுப்மான் கில் ஆகியோர் நிதானமாக ஆடினார்கள்.

கில் அறிமுக போட்டி போல் அல்லாமல் ஆஸ்திரேலிய அணியின் ஆக்ரோஷமான பந்து வீச்சை எளிதாக சமாளித்து விளையாடினார். பிட்ச் பவுலிங் செய்ய சாதகமாக இருந்த காரணத்தால் ஒவ்வொரு பந்தும் சவாலாக வந்தது. நினைத்ததை விட பந்து அதிகமாக ஸ்விங் ஆனது. அதிலும் பேட் கம்மின்ஸ், ஸ்டார்க் ஓவர்கள் மிகவும் சவாலாக இருந்தது.

முதல் தர போட்டிகளில் எப்படி ஆடுவாரோ அதேபோல் நிலையாக நின்று சுப்மான் கில் ஆடினார். அதோடு புஜாராவும் அவ்வப்போது இவருக்கு டிப்ஸ் கொடுத்து வந்தார். 40 நிமிடமும் இவர் சிறப்பாக ஆடினார். போட்டி முடிந்த பின்னர் சிரித்துகொண்டே வெளியேறி ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுத்தார்.

Shubam-Gill-Cinemapettai.jpg

Shubam-Gill-Cinemapettai.jpg

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top