இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, நாளை மறுநாள் அறிவிக்கப்படவுள்ளது.

இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் போட்டியை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணியும், ஐசிசி., யின் முழுநேர உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 7 அணிகளும் இத்தொடரில் பங்கேற்கின்றன.

இதில் பங்கேற்கும் எல்லா அணிகளும் தங்களது அணியை வெளியிட்ட நிலையில், கிரிக்கெட் வல்லரசான இந்தியா, இன்னும் ஐசிசியை ஆட்டம் காண வைத்து வருகிறது. இத்தொடருக்காக எல்லா அணிகளும் முழுமையாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணி இத்தொடரில் பங்கேற்குமா, இல்லையா என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியாமலேயே இருந்தது.

இந்நிலையில், இன்று நடந்த கூட்டத்தில் பிசிசிஐ.,யின் இடைக்கால தலைவர், சி.கே. கண்ணா, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதன் மூலம், இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்பது உறுதியாகியுள்ளது.